“7”ம் நம்பரை தேர்வு செய்ததற்கு இது மட்டும் தான் காரணம்; தல தோனி ஓபன் டாக் !!

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி தனது ஜெர்சியல் நம்பர் 7 பயன்படுத்துவதற்கான காரணத்தை குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகர முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு உலக கோப்பை தொடர் சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்து உலக அளவில் தலைசிறந்த கேப்டன் என்ற பெயர் எடுத்தவர்.

அப்படிப்பட்ட மகேந்திர சிங் தோனி,இந்திய அணியில் சேர்ந்த நாள் முதல் தனது ஜெர்சியில் நம்பார் 7 தான் பயன்படுத்தி வருகிறார், அதே போன்று தான் பயன்படுத்தும் வாகனங்களின் நம்பர் பிளேட்டிலும் நம்பர் 7ஐ, தோனி பயன்படுத்துவது வழக்கம், இதை பெரும்பாலானோர் தோனி அதிர்ஷ்ட எண் 7தான் என்றும், தோனி மூடநம்பிக்கையின் காரணமாகத்தான் நம்பர் 7ஐ தனது ஜெர்சியில் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பேசி வருகின்றனர்.

அந்த வதங்தி எல்லாம் சுக்கு நூறாகும் படி, செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய ஜெர்சியில் நம்பர் 7 போட்டிருப்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து தோனி பேசுகையில், பெரும்பாலான மக்கள் நான் மூட நம்பிக்கையின் காரணமாக தான் எனது ஜெர்சியில் நம்பர் 7 பயன்படுத்துகிறேன் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையான காரணம் நான் ஜூலை 7ஆம் தேதி பிறந்தேன், மாதமும் 7 தேதியும் 7 என்பதனால் எனது ஜெர்சியில் 7ஆம் நம்பரை பயன்படுத்துகிறேன். சிலர் என்னிடம் ஏழு என்பது நியூற்றல் நம்பர் அது உனக்கு நல்லதும் செய்யாது, உனக்கு தீங்கும் விளைவிக்காது என்று மூட நம்பிக்கையான கருத்தை என்னிடம் தெரிவிக்கின்றனர். ஆனால் நான் மூட நம்பிக்கையின் காரணமாக இந்த எண்ணை பயன்படுத்தவில்லை.மேலும் அனைத்து எண்களுமே நல்லதுதான் என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.