வீடியோ; விலை உயர்ந்த பைக்கில் ஹாயாக சுற்றும் தோனி; விலை என்ன தெரியுமா..?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி விலை உயர்ந்த புதிய பைக் ஒன்றை ஓட்டிச்செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டை தாண்டி பைக், கார் ஓட்டுவதில் மிகப்பெரிய மோகம் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரின் போது பெங்களூருவிலிருந்து சென்னைக்கு பைக்கில் வந்து செல்வார். தோனியிடம் ஹம்மர் எச்2 கார், ஜீப் கிரான்டு செரோகி டிராக்ஹாக் உள்ளிட்ட ஆடம்பரமான கார்கள் உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு கவாஸகி நின்ஜா எச்2 பைக்கை வாங்கினார். இந்தியாவில் அறிமுகமான இந்த பைக்கை தோனி தான் முதல் ஆளாக விலைக்கு வாங்கினார். அப்போது இந்த பைக்கின் விலை 29 லட்சம் ரூபாய் என எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்திருந்தது.
கவாஸகி நின்ஜா எச்2 பைக்கை அவரிடம் வந்து சேர்ந்த புகைப்படத்தையும் அவர் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அதன்பின் இந்த பைக்கை ஓட்டி சென்றது போல் எந்த புகைப்படமும், வீடியோ வெளியாகவில்லை.
தற்போது ஜார்கண்டில் உள்ள ராஞ்சி சர்வேதச கிரிக்கெட் மைதானத்திலிருந்து கவாஸகி நின்ஜா எச்2 பைக்கை தோனி ஓட்டி வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
கவாஸகி நின்ஜா எச்2 பைக்கின் தற்போதைய விலை 35 லட்சம் ரூபாயாகும். பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான கவாஸகி நின்ஜா எச்2 பைக்கை தல தோனி ஸ்டைலாக ஓட்டி செல்கிறார்.