உலகக் கோப்பைக்கு பின்னும் தோனி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி உலகக் கோப்பை தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “உலகக் கோப்பையில் தோனி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னும் அவர் விளையாட வேண்டும். ஏனென்றால், விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும் வயது அதற்கு ஒரு தடையல்ல.
மேலும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். குறிப்பாக பும்ரா மற்றும் ஷமி சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்கு ஆற்றுவார்கள். உலகக் கோப்பையில் இந்திய அணியில் பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். அத்துடன் தற்போது ஃபார்மில் இல்லாத ஷிகர் தவானும் விளையாடுவார். என்னை பொருத்தவரை ரோகித் சர்மாவுடன் தவான் தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்” எனக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் மே 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் தோனி சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த உலகக் கோப்பை தொடருடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கங்குலி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு ராஞ்சியில் தோனியும் அவரது மணைவியும் சேர்ந்த் விருந்தளித்துள்ளனர்.. இந்நிலையில் தனது மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இந்திய அணிக்கு விருந்தளித்துள்ளனர். இதனை ராஞ்சியிலுள்ள தோனியின் இடத்தில் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சாஹல், “நேற்று இரவு அளித்த விருந்திற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று இரவு தோனியின் இடத்தில் நல்ல விருந்தாக அமைந்தது. அணியுடன் செலவழித்த மகிழ்ச்சியான இரவாக அமைந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.