“சேவாக்-க்கு என்னடா ஆச்சு?..” தோனியை 2019ல் தடை செய்யச்சொல்லி போராடினேன்.. கடைசியில் அபராதத்துடன் தப்பித்துவிட்டார் – சேவாக் ஆதங்கம்!

“2019ஆம் ஆண்டு ஐபிஎல் இல் தோனி செய்த செயலுக்காக அவரை குறைந்தபட்சம் சில போட்டிகள் தடைசெய்ய கோரிக்கை வைத்தேன். அது நடக்கவில்லை.” என்று சமீபத்திய பேட்டிகள் ஆதங்கத்துடன் பேசினார் சேவாக்.

சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த பிறகு தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. இத்துடன் சிஎஸ்கே அணிக்கு தனது கேப்டன் பொறுப்பில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வரும் தோனி, கேப்டன் பொறுப்பில் கூலாக முடிவுகள் எடுப்பது மற்றும் திட்டமிடுவதில் கைதேர்ந்தவர் ஆவார். எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் அமைதியாக கையாளக்கூடியவரும் ஆவார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியின்போது, ​​சென்னை அணி பேட்டிங் செய்தபோது, ​​பந்து இடுப்பிற்கு மேலே வீசப்பட்டது. ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் அதற்கு நோபால் கொடுக்கவில்லை.

டக் அவுட்டில் அமர்ந்திருந்த தோனி, உடனடியாக களத்திற்கு உள்ளே நுழைந்து நடுவர்களிடம் விவாதம் செய்தார். இது அப்போது பேசுபொருளாக மாறியது. பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. இறுதியாக இந்த செயலுக்காக போட்டியிலிருந்து 50 சதவீதம் அபராதத்தை தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் விதித்தது.

இந்த விவகாரத்தை இப்போது குறிப்பிட்டு, ஐபிஎல் தொடரில் தோனி செய்தது முறையற்றது. அதற்காக அவரை தடை செய்திருக்க வேண்டும் என்று நான் பேசினேன். அது நடக்கவில்லை என ஆதங்கத்துடன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் சேவாக்.

“2019 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் தோனி செய்தது முறையற்றது. சீனியர் வீரராக இருந்து வரும் அவர் பல இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மேலும் பல வருடங்களாக கேப்டன் பொறுப்பில் இருக்கும் அவர் இந்த விவகாரத்தை இன்னும் நன்றாக கையாண்டிருக்கலாம்.

ஆனால் அப்படி செய்யாமல் முறையற்ற செயலில் ஈடுபட்டார். இந்த குறைந்த பட்சம் இரண்டு மூன்று போட்டிகள் அவரை தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு விதமாக கோரிக்கை வைத்தேன். அது நடக்காமல் போனது. இறுதியாக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு தப்பித்துவிட்டார். இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இனி நடந்தால் கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும்.” என்றும் ஆதங்கத்துடன் பேசினார் சேவாக்.

 

Mohamed:

This website uses cookies.