உலககோப்பை போட்டியில் தோனியின் கையில் காயம் ஆன மர்மம்!! தற்போது வெளியான ரகசியம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

உலக கோப்பை போட்டியில் தோனியின் கையில் காயம் ஆன மர்மம் தற்போது வெளியான ரகசியம்

12 ஆவது உலகக் கோப்பை போட்டி சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டி பல்வேறு சர்ச்சைகளுக்கும் மோசமான நடுவர்களின் தீர்ப்புகளுக்கும் புகழ்பெற்றதாக அமைந்தது. இந்த தொடர் முழுவதும் நடுவர்கள் தங்கள் பங்கிற்கு தங்களது தவறான முடிவுகளால் ஒவ்வொரு ஆட்டத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தனர் .

இறுதிப் போட்டியில் இறுதி ஓவர்களில் கூட அவர்களது மோசமான தீர்ப்பு வழங்கும் விதம் தொடர்ந்தது. இப்படித்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இது ஒருபுறமிருக்கட்டும்.

இந்திய அணி உலக கோப்பை தொடரில் செமி பைனல் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற உடை அணிந்து ஆடியது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்மகேந்திர சிங் தோனி ஓரளவிற்கு நன்றாக ஆடினார். போட்டியின் போது அவரது கையில் விரல் முறிவு ஏற்பட்டுள்ளது.

இது அப்போது சிறிய செய்தியாகவே வந்தது. மேலும், அதை போட்டியின் போது அவர் சற்றே தடுமாற்றமான ஆட்டத்துடன் இருந்ததை நாம் கண்கூட கண்டோம்.

இந்நிலையில் அந்த காயம் குறித்து தற்போது அதிர்ச்சிகரமான, இரகசியமான செய்தி வெளியாகியுள்ளது.

”இந்த போட்டியின்போது தோனி காயமடைந்துள்ளார். காயமடைந்த அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடியுள்ளார். விரலில் உள்ள முக்கியமான சிறு எழும்பு உடைந்துள்ளது. இது தோனியை கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக கையை மடக்காமல் கூட உலக கோப்பை தொடர் முழுவதும் ஆடிக்கொண்டிருந்தார்.

மேலும், இந்த காயத்தை தோனி சற்று ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அந்த காயம் பற்றி யாரும் பெரிதாக ஏதும் பேசிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்துள்ளார்.

மேலும், போட்டி முடிந்தவுடன் அந்த காயத்தை ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் அழைத்துள்ளனர். இந்திய அணியின், குழு மருத்துவர்கள் அழைத்தபோதும் தோனி ஸ்கேன் வேண்டாம் என்று அவர்களிடம் மறுத்துள்ளார். இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால்…

ஒரு வேளை அந்த காயம் பெரிதாக இருந்து அடுத்த சில போட்டிகளில் ஆட முடியாமல் போய்விடும் என்றும் தோனி நினைத்துள்ளார். அதனை தாண்டி உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இராணுவத்தில் இணைய அப்போதே முடிவு செய்துள்ளார் தோனி.

BIRMINGHAM, ENGLAND – JUNE 30: MS Dhoni of India plays a shot during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and India at Edgbaston on June 30, 2019 in Birmingham, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

அந்த காயம் இருந்தால் கண்டிப்பாக ராணுவத்தில் உடனடியாக சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்று தோனிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இதன் காரணமாக இதனை  நினைவில் வைத்து, அந்த காயம் பற்றி யாருக்கும் வெளியே தெரிய வேண்டாம் என்று நினைத்து மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது தற்போது வெளியே வந்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.