இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி தான் இந்திய அணியின் 100வது டி20 போட்டியாகும். ரெய்னா தோனி இருவரும் இந்தியாவின் முதல் மற்றும் 100வது டி20 போட்டியில் கலந்து கொண்டவர்கள் என்ற சாதனையை படைத்தனர்.
இந்திய அணிக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி தான் 100வது போட்டியாகும். இந்திய அணி தனது முதல் டி20 போட்டியை 2006 ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஆடியது. இதில் சேவாக் கேப்டன் பொறுப்பில் இருந்தார். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியசாத்தில் வென்றது.
இதில் கலந்து கொண்ட அணியில் ரெய்னா தோனி இருவரும் இருந்தனர். மேலும், நேற்று ஆடிய 100வது போட்டியிலும் தோனி ரெய்னா இருவரும் இருந்தனர். முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் இருந்தார், ஆனால் துரதிஷ்டவசமாக 100வது போட்டியில் அவர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், முதல் மற்றும் 100வது போட்டியில் ஆடியவர்கள் என்ற சாதனையை படைத்தனர். இதுவரை 90 டி20 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 1,444 ரன்கள் குவித்துள்ளார். 74 போட்டிகள் ஆடியுள்ள ரெய்னா 1,498 ரன்கள் அடித்துள்ளார்.
இருவரும் இணைந்து 2007ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பையும் வென்றனர்.