வீடியோ : பட்லரை அவுட் ஆக்க துல்லியமான கேட்ச் பிடித்த தோனி!!

இங்கிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்று இந்தியா பீல்டிங்: முதல் ஓவரிலேயே ‘ட்ராமா’ தொடக்கம்: தவறு செய்தார் கோலி

ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார், அணியில் புவனேஷ்வர் குமார் இல்லை. சித்தார்த் கவுல் வந்துள்ளார்.

இந்திய அணி: ரோஹித், தவண், ராகுல், கோலி, ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், சாஹல்.

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, டேவிட் வில்லே, லியாம் பிளெங்கெட், ரஷீத், மார்க் உட்.

ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டை யும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Editor:

This website uses cookies.