செல்ல மகளுடன் 6 மொழிகளில் கொஞ்சி பேசிய தல தோனி; வைரலாகும் வீடியோ !!

செல்ல மகளுடன் 6 மொழிகளில் கொஞ்சி பேசிய தல தோனி; வைரலாகும் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் கேள்விகளுக்கு தோனியின் செல்ல மகள் ஸிவா தோனி பதிலளிக்கும் கியூட் வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது மகளுடன் தமிழில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனி தனது மகள் ஸிவா தோனியிடம், “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்க, அதற்கு மழலை குரலில் “நல்லா இருக்கேன்” என ஸிவா பதிலளிக்கிறார். மேலும், 6 மொழிகளில் தோனி தனது மகளிடம் கேள்வி கேட்க, அதற்கு அவரது மகள் க்யூட்டாக அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார்.

ஐபிஎல் போட்டிகளுக்கிடையே, மகளுடன் மொழிப் பயிற்சி என பதிவிட்டுள்ள தோனியின் அந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் ஆகவும் மாறியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 12-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், பெங்களூரு அணியை 70 ரன்னில் சுருட்டி தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடுப்பில் தல தோனி ;

தங்கள் வீட்டு பிள்ளைகளிடம் செல்ஃபி எடுக்க வேண்டுமென தோனியை காவல் துறை அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஐ.‌பி.எல். போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த தோனி, நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக உள்ள சில காவல் துறை அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அழை‌த்து வந்து டோனியுடன் செல்ஃபி எடுக்க முயல்வதாக கூறப்படுகிறது.

இதனால் தோனியின் தனி சுதந்திரம் பாதிக்கப்படுவதாக, சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி, இணை ஆணையர் மகேஸ்வரியை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், புகார் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக அதிகாரபூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Mohamed:

This website uses cookies.