இராணுவத்தில் இணைந்த முன்னாள் கேப்டன் ; குவியும் வாழ்த்துக்கள் !!

இராணுவத்தில் இணைந்த முன்னாள் கேப்டன் ; குவியும் வாழ்த்துக்கள்

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசரா பெரேரா அந்நாட்டின் ராணுவத்தின் கஜாபா ரெஜிமன்ட் பிரிவில் மேஜராக பணியில் சேர்ந்துள்ளார்.

ராணுவத்தின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரி திசரா பெரேரா ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து திசரா பெரேரா ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ” ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின்பெயரில் கஜாபா ரெஜிமென்டில் ராணுவ மேஜராக பணியில் சேர்ந்துள்ளேன். இதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியமாக, பரிசாக கருதுகிறேன். என்னுடைய சிறப்பான பணியை ராணுவத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் கொழும்பு கெஜட் நாளேடு வெளியிட்ட தகவலில் ” கஜாபா ரெஜிமென்டில் திசரா பெரேரா இலங்கை ராணுவத்தின் தன்னார்வ படைக்கு மேஜராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சந்திமால், இலங்கை ராணுவத்தில் சேர்ந்து ராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

30வயாகும் திசாரா பெரேரா இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,210 ரன்களும், 79 டி20 போட்டிகளில் விளையாடி 1,169 ரன்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 203 ரன்களும் சேர்ததுள்ளார்.

Mohamed:

This website uses cookies.