தோனிக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரும் கவுரவம்: கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல், வரும் அக்டோபர் 22-ம் நடைபெற உள்ளது. இதற்குமுன் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்று சிஓஏ (கிரிக்கெட் கட்டுப்பாட்டு முகமை) அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து அனைத்து மாநில கிரக்கெட் சங்கத்தினரும் தனது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்திலும் புதிய தலைவர் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் கவுரவ உறுப்பினராக தோனி உள்ளார். அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் தேர்தலில் யார் வாக்களிக்கலாம், யாரை உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் அவருக்கும் பங்குள்ளது.

மாநில கிரிக்கெட் வாரிய தேர்தலில் முன்னாள் வீரர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

தோனி தலைமையிலான இந்திய அணி தான் 3 விதமான உலகக் கோப்பையிலும் வெற்றியடைந்தது. தோனியை பெருமைப்படுத்தும் விதமாக ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினராக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பொதுக்குழு ஆலோசனைக்கு பின்னர் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த ஆண்டில் அடுத்ததாக பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர் உள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்க போவதில்லை. தொடர்ச்சியாக நவம்பர் மாதம் அவர் விடுப்பில் இருப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், தோனி தொடர்ந்து விளையாடாமல் இருப்பதற்கான காரணங்கள் தெளிவுபெறவில்லை. அதனால், பல காரணங்கள் பலரால் யூகிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு உலகக் கோப்பை டி20 தொடர் வரவுள்ளதாக புதிய விக்கெட் கீப்பரை தயார் செய்ய வேண்டும் என்பதால் ரிஷப் பண்டிற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தோனியும் இதற்கு ஒத்துக் கொண்டு அதற்கேற்க தன்னுடைய முடிவை பொருத்திருந்து அறிவிப்பார் என்ற தகவலும் வெளியானது.

இப்படியிருக்கையில், தோனி விளையாடாமல் இருப்பது மற்றொரு காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களின் போது தோனியின் முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த காயங்கள் இன்னும் சரியாகவில்லை என்றும் அதனால்தான் நவம்பர் வரை அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல்தான் அது. என்ன இருந்தாலும் காரணங்கள் எதுவும் இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.

Sathish Kumar:

This website uses cookies.