சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 37 வயதாகிறது. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் இவர் ஆடுவாரா என்ற சந்தேகங்களும் தற்போது வலுத்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது….
அடுத்து ஐபிஎல் தொடரில் அவர் கண்டிப்பாக வருவார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த 2 வருடமாக நாம் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்று பேசி வருகிறோம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அவர் அற்புதமாக ஆடி வருகிறார். அவரைப் பற்றி நன்கு தெரியும் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.
தோனி கூப்பிட்டால் அவர் வீட்டிற்கு ஓடியே சென்று விடுவேன் என தோனிக்கு ரன் அவுட் கொடுத்த 3வது நடுவரை திட்டி கதறி அழுத சிறுவன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடந்த 12 ஆம் தேதி களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இதனிடையே போட்டியில் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் விக்கெட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார். தோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதில், அந்தச் சிறுவன் தோனி அவுட் இல்லை என்றும் அவுட் கொடுத்த 3 வது நடுவர் தூக்கில் தொங்குவார் எனவும் கூறி கதறி அழுதான்.
இந்நிலையில் அந்தச் சிறுவன் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளான். இதுகுறித்து சிறுவன் கூறுகையில், “என்னுடைய பெயர் கிருதிகேஷ். அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன். நான் தான் 3 வது நடுவரை திட்டி அழுதது. அவ்வாறு திட்டியதற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். நான் சிஎஸ்கே மீது உள்ள பாசத்தினால் உணர்ச்சிவசப்பட்டு திட்டிட்டேன். தோனி என் வீட்டுக்கு வந்தால் காலை தொட்டு கும்பிடுவேன். தோனியை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். தோனி கூப்பிட்டால் இம்ரான் தாஹீர் போன்று தோனி வீட்டிற்கு ஓடியே சென்று விடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.