அன்று இவர் மட்டும் அன்று நெ.3ல் களமிறங்கி இருந்தால்: இன்று சச்சின், கோலி எல்லாம் மூலையில் உட்காந்திருப்பார்கள்! போட்டுத்தாக்கும் கவுதம் கம்பிர்

தோனி கேப்டனாகாமல் இருந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கி இருந்தால் பிரமாதப்படுத்தியிருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் “கிரிக்கெட் கனெக்டட்” நிகழ்ச்சியில் பேசிய கவுதம் காம்பீர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் ” இந்த கிரிக்கெட் உலகம் ஒன்றைத் தவறவிட்டுவிட்டது. அது தோனி இந்தியாவுக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்காதது.

அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தால், மூன்றாவது ஆட்டக்காரராகக் களமிறங்கியிருந்தால், கிரிக்கெட் உலகம் வேறு ஒரு தோனியை ரசித்திருக்கும். ஒரு முற்றிலும் மாறுபட்ட தோனியை நாம் கண்டு இருக்கலாம்” என்றார்.

மேலும் தொடர்ந்த காம்பீர் “அப்படி அவர் களமிறங்கியிருந்தால் இன்னும் ஏராளமான ரன்களை குவித்திருப்பார், பல சாதனைகளை உடைத்திருப்பார். சாதனைகளை விடுங்கள் சாதனைகள் படைக்கப்படுவதே உடைப்பதற்காக தானே. அதைவிட ஒரு மிக நல்ல பேட்ஸ்மேனை கிரிக்கெட் உலகம் ரசித்திருக்கும். அது அவர் கேப்டனாக இல்லாமல் போயிருந்தாலும் சாத்தியப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இறுதியாகப் பேசிய காம்பீர் “ஒரு சமமான பிட்சில் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கியிருந்தால், இப்போதுள்ள பவுலர்களை மனதில் வைத்துப் பார்த்தால் வேறு மாதிரியான சாதனைகளைப் படைத்திருப்பார். உதாரணத்துக்கு இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை நினைத்துப் பாருங்கள். இப்போது எதிலுமே தரமில்லை, அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதி வாய்ந்ததாக இல்லை” எனக் கூறியுள்ளார்.

No Innings Runs Avarage Best 50/100 Strike Rate Not  Out
1 2 98 49.00 96 1/0 86.73 0
3 16 993 82.75 183* 6/2 99.70 4
4 30 1358 56.58 109* 12/1 92.82 6
5 83 3169 50.30 134 18/4 86.16 20
6 129 4164 47.32 139* 30/1 83.82 41
7 34 940 44.76 139* 6/2 93.72 13
8 3 51 17.00 20 0/0 62.20 0
மொத்தம் 297 10773 50.58 183* 73/10 87.56 84

 

 

கௌதம் கம்பீர் கூறுவது ஒருவகையில் உண்மைதான். அவர் மூன்றாம் இடத்தில் மட்டும் அதன் 16 ஆட்டங்களில் ஆடி 993 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் 2 சதங்களும் அடங்கும். சராசரி 82.5. ஸ்ட்ரைக் ரேட் 99.7 ஆகவும் இருக்கிறது. இவர் ஆடிய போசிஷன்களிலேயே இந்த இடத்தில்தான் அதிகபட்ச சராசரி மற்றும் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தோனி இதே வேகத்தில் ஆடி இருந்தால் தற்போது வரை கிட்டத்தட்ட 21,600 ரன்கள் ஒருநாள் போட்டியில் மட்டும் குவித்திருப்பார்

பல போட்டிகளில் சொதப்பி ஆடி இருந்தாலும்கூட தோனி இந்த இடத்தில் ஆடி இருந்தால் கிட்டதட்ட குறைந்தது 18,000 ரன்களையாவது எடுத்து இருப்பார் என்பதுதான் புள்ளிவிவரம்.

கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி அரைசதம் அடித்திருந்தார். இருந்தாலும் இந்திய அணியை 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கடக்க உதவ தவறினார். இதற்கு பின் தோனி தானாக 2 மாதங்கள் இந்திய அணியில் இருந்து விலகியிருந்தார். அதேநேரம் 15 நாட்கள் இந்திய ராணுவத்திறக்காக பணிக்கு சென்றிருந்தார். இதனால் இவர் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்த கொண்டே உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.