உலக கோப்பை தொடரில் இவர் தான் கெத்து காட்டுவார் – புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்

உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தோனி யின் பங்களிப்பு விராட் கோலி தலைமையிலான அணிக்கு மிக முக்கியமான துருப்புச் சீட்டாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் பல ஜாம்பவான்கள் இந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என கணித்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் இதையே தெரிவித்துள்ளார். மேலும் தோனியின் தற்போதைய நிலை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தோனி நான்காவது வீரராக களம் இறங்கி 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடினார்.

நேற்றைய போட்டியில் மின்னல் வேகத்தில் இரண்டு ஸ்டம்பிங்களை நிகழ்த்தினார். அதில் குறிப்பாக, ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை மைக்ரோ வினாடியில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இதற்கு ஷ்ரேயாஸ் ஐயரும் தோனியை புகழ்ந்து தள்ளினார்.

தோனி குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது – “உலகக் கோப்பையில் தோனி இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டு. இவரின் அசாத்தியமான கீப்பிங்கை அனைவரும் கண்டிருப்போம். கண் சிமிட்டும் நேரத்தில் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி விடுகிறார். அதே போல் கடைசி கட்டங்களில் பீல்டிங்கில் வீரர்களை சரியான இடத்தில் வைப்பதில் கைதேர்ந்தவர் தோனி. இது பல போட்டிகளில் விராட் கோலிக்கு உதவியாக இருந்திருக்கிறது. உலக கோப்பையிலும் அது தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் அனுபவங்களை இளம் வீரர்கள் பெற்று பயனடைய வேண்டும்” என புகழாரம் சூட்டினார்.

Prabhu Soundar:

This website uses cookies.