ஹர்திக் பாண்டியா மற்றும் பிரித்திவ் ஷாவிற்கு ஏன் இடமில்லை!! தேர்வுக்குழு தலைவரின் பதில் இதுதான்!!

உலகக்கோப்பை தொடரையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இந்தத் தொடரின் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று போட்களுக்கும் விராட் கோலியே தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தோனி இந்தத் தொடரில் முன்பே பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவர் இந்தத் தொடருக்கான பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

எனவே தோனிக்கு பதிலாக ரிஷப் பந்திற்கு விக்கெட் கீப்பர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில், சாஹா கூடுதல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழ்நாடு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த அணியை அறிவித்துவிட்டு பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் ஹர்திக் பாண்டியா மற்றும் பிரித்திவ் ஷா ஆகியோர் அணியில் ஏன் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது …

An injury had ruled Shaw (19), who has already made his Test debut, out of India A’s ongoing tour to the West Indies.

பிரித்திவ் ஷா கடந்த வருடம் ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த அவர் அவ்வப்போது ஒரு சில தொடர்களில் ஆடினாலும், இன்னும் முற்றிலுமாக குணமடையவில்லை. இதனால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து தொடர்ச்சியாக ஆடிவருகிறார். மேலும், அவர் ஆல் ரவுண்டர் என்பதால் அவரை சரியாக பயன்படுத்த வேண்டியுள்ளது. அவருக்கு இந்திய அணியில் உழைப்பும் வேலைப்பளுவும் அதிகம். அதனால் தற்போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது சமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

 

மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய சுற்றுப்பயணத்தின் முழு அட்டவணை இங்கே:

1 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 3 புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் பிராந்திய பூங்கா ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில்

2 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 4 புளோரிடாவின் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் பிராந்திய பூங்கா ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில்

3 வது டி 20 ஐ – ஆகஸ்ட் 6 கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில்

1 வது ஒருநாள் – ஆகஸ்ட் 8 கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில்

2 வது ஒருநாள் – ஆகஸ்ட் 11, டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினின் குயின்ஸ் பார்க் ஓவலில்

3 வது ஒருநாள் – ஆகஸ்ட் 14, டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயினின் குயின்ஸ் பார்க் ஓவலில்

1 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 22-ஆகஸ்ட் 26 ஆன்டிகுவாவின் வடக்கு ஒலி, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில்

2 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 3 ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபினா பூங்காவில்

Sathish Kumar:

This website uses cookies.