இந்திய அணியில் சுப்மன் கில்லிற்கான இடம் இது தான்; எம்.எஸ்.கே பிரசாத் திட்டவட்டம் !!

இந்திய அணியில் சுப்மன் கில்லிற்கான இடம் இது தான்; எம்.எஸ்.கே பிரசாத் திட்டவட்டம்

இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் இளம் வீரரான சுப்மன் கில்லிற்கான இடம் என்ன என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அணியில் இருந்து நீக்கப்பட்ட கே.எல் ராகுலுக்கு பதிலாக இடம்பெற்றிருக்கும் சுப்மன் கில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சுப்மன் கில் துவக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் ஆகிய இடங்களுக்கான பேக் அப் வீரராகவே சுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளதாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் பேசியதாவது, துவக்க வீரராக மட்டும் இல்லை, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையையும் கருத்தில் கொண்டே சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இரண்டு இடங்களுக்குமான பேக் அப் வீரராகவே சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.எல் ராகுல் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் எடுத்துள்ளோம், சுப்மன் கில்லின் ஆட்டத்தை பொருத்து அவருக்கு இன்னும் அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்படும், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட சுப்மன் கில் தகுதியானவர் தான்” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.