இலங்கையில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அபினவ் முகுந்த் நிறவேற்றுமை காரணமாக தானும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து மிகநீண்ட செய்தியை படமாக பதிவிட்டுள்ளார்.
இந்த இயந்திர காலத்தில் கிரிக்கெட்டர்கள் சமூக வலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் தங்களது கருத்துக்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர் கருத்துகளை விமர்சிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். பலர் தங்கள் பாதிப்படையும் நிகழ்ச்சிகளையும், செயல்களையும் அவ்வப்போது பதிவேற்றி வருகின்றனர்.
அது போல் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த தற்போது நிறவேற்றுமையால் மிகவும் பாதிப்படைந்ததாக தெரிவித்துள்ளார் . மேலும் அதற்க்கு வருத்தம் தெரிவித்தும் பதிவேற்றியுள்ளார். அழகு என்பது தோல் நிறத்தில் அல்ல, அது உள்ளத்தில் உள்ளது என கூறியுள்ளார் .
ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது :
நானும் எனது அடர்ந்த நிற தோலின் காரணமாக நிற வெறியால் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். இந் நிற வெறியை பற்றி ஒருநாள் கட்டாயம் பேசியாக வேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். நான் எனது இளம் பருவத்தின் பகுதியை மைதானத்திலும் மிக அடர்ந்த வெயிலிளும் கழித்தேன் . இதனால் கூட எனது தோலின் நிறம் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் . ஆனால் இது என்னுடனே வந்தது , எப்போதும் என்னுடனேதான் இருந்து வருகிறது. ஆனால் நான் என்து நிறத்தினால் தலை குனிந்துவிடவில்லை, வெட்கப்பட்டு ஓடி ஒளியவும் இல்லை .
நான் சென்னையில் இருந்து வந்தவன். இந்தியாவின் மிக அதிகமாக வெயில் அடிக்கும் இடங்களில் அதுவும் ஒன்று. நான் மைதானத்தில் என் இடத்தில் ஆடிவ்ரும் போதே மைதானத்தின் மற்ற மூலைகளிலிருந்து எனது நிற வேற்றுமையின் காரணமாக பல மறைபேச்சுகளுக்கு உள்ளாகியுள்ளேன் .
நான் மைதானத்தில் இருக்கும் போதே மற்றவர்கள் என்னை கீழ்தனமாக பார்த்து சிரிக்கும் அவலத்தையும் கண்டுள்ளேன். இவை அனைத்தையும் நான் எனக்காக மட்டும் பேசவில்லை என்னைப்போல நிறவெறி வேற்றுமையையும் , அதனால் ஏற்படும் இன்னல்களையும் சந்திது வருபவர்களுக்காவும் பேசி வருகிறேன்.
சமூக வலைதளங்களிலும் எல்லா இடங்களிலும் இன்றும் நிறத்தை வைத்து நடக்கும் அத்து மீறல் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது . இந்த முரண்பாடு நம்மால் ஏற்பட்டது இல்லை. ஆனால் நாம் தான் இதனை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும். அது போன்ற பொருப்புணர்வு நமக்கு உள்ளது என்பதை இங்கு நான் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன்.
அழகு என்பது பார்பதற்க்கு நன்றாக இருப்பதல்ல , அது உண்மை மற்றும் பேசும் போது புண்படுத்தாத நிதானத்தில் இருக்கிறது . என்று தன் உரையை முடித்தார் .
இன்னும் ஏன் இந்த அவலம் :
21 ஆம் நூற்றாண்டில் இன்னும் கட்டி வைத்திருக்கும் சாதி , மத மற்றும் நிறம் தொடர்பான பேதங்கள் யாவும் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் எப்போதும் முன்னேற்ற்ப் பாதைக்கு அழைத்து செல்லாது . நாம் செய்யும் செயலும் நமக்கான ஒரு அர்பணிப்பும் எப்போதும் இவற்றைக் கடந்தாக வேண்டும்.
ஒரு உயர் மட்டதில் இருக்கும் கிரிக்கெட் வீரருக்கே இந்நிலைமை எனும்போது , நம்மை போன்றவர்கள் சாதி, மத நிற வெறியால் பாதிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால் , பலரும் நம்மைப் சாமானியர்களும் இது போன்ற காரணிகளாலும் பாதிக்கப்பட்டுதான் வறுகின்றோம். இவற்றை களைய இளங்கர்களாகிய நாம் நம் அடுத்த தலைமுறையை மிகச்சிறு வயதிலிருந்தே இது போன்ற காரணிகளை பார்த்து நடத்தல் வேண்டும் என வளர்த்து எடுத்தல் வேண்டும்.