மும்பை பாண்டூப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பன்வார். கிரிக்கெட் வீரரான இவர், சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார். நேற்று இரவு தனது தோழியுடன் பாண்டூப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ராகேஷ் பன்வாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராகேஷ் பன்வாரின் நண்பர் கோவிந்த் ரத்தோர் கூறுவையில், ராகேஷ் பன்வாருக்கும், அவர் வசிக்கும் பகுதியில் இருந்த கான் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் அவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் ராகேஷ் பன்வார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில்,
பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை 2019-ன் 11வது ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் கடும் மழையால் பாதிக்கப்பட பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது, இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றது.
இதன் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றி மூலம் 3 புள்ளிகள் பெற்று நிகர ரன் விகிதம் -1.517 என்ற நிலையில் உள்ளது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகள் பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளது.
பாகிஸ்தான் 4ம் இடத்திலும் மே.இ.தீவுகள், இங்கிலாந்து 5 மற்றும் 6ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியிருப்பதால் 7வது இடத்தில் உள்ளது.
இன்று நடுவர்கள் நீஜல் லாங், இயன் கோல்ட் ஆகியோர் உள்ளூர் நேரம் 3.45 மணியளவில் ஆட்டம் சாத்தியமில்லை என்று அறிவித்தது.
இந்த ஆட்டம் ரத்தானதால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்த இலங்கை அடுத்த உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டியதுதான், இதுவரை பாகிஸ்தான் 7-0 என்று வெற்றியில் முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் அணி தற்போது 5 நாட்கள் இடைவெளியைக் கொண்டாடிய பிறகு ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இலங்கை அணி ஜூன் 11ம் தேதி வங்கதேசத்தை பிரிஸ்டலில் சந்திக்கிறது.