மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜாகிர் கான்!!

Indian cricketer Zaheer Khan speaks to the media in Mumbai on October 15, 2015. India's finest left-arm seamer Zaheer Khan announced his retirement from international cricket on October 15, saying he was not fit enough to deal with the rigours of the modern game. AFP PHOTO/ PUNIT PARANJPE (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)

மும்பை இந்தியன்ஸ் அணியில் செயல்பாடுகளின் இயக்குனர் என்ற பதவியில் முன்னாள் வீரர் ஜாகிர்கான் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணி ஒரு நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியாக அமைந்துள்ளது அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், மஹிலா ஜெயவர்தேனே, ஷேன் பான்ட் என பல வீரர்கள் முன்னாள் வீரர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. தற்போது அந்த பட்டியலில் ஜாகிர் கான் இணைந்துள்ளார்.

மும்பை தக்க வைத்துக் கொண்டது ரோஹித் சர்மா (சி), பாண்டிய, ஜஸ்ப்ரிட் , பாண்டிய, இஷான் கிஷன், Suryakumar யாதவ் மயான்க் ராகுல் , ராய், Siddhesh லாட், ஆதித்யா தாரே, எவின் லூயிஸ், பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் , ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இந்திய டெஸ்ட் அணி வீரரான ஹனுமா விஹாரியை ரூ.2.கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி கேப்பிடள்ஸ் அணி.

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.. 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது. 350-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும், 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் உள்ளனர்.

ஏலம் தொடங்கியவுடன் சட்டீஸ்வர் புஜாரா பெயர் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு முன்மொழியப்பட்டது. ஆனால், எந்த அணி நிர்வாகமும் புஜாராவை எடுக்க முன்வரவில்லை. அடுத்ததாக மேற்கு வங்க அணியின் மனோஜ் திவாரியின் பெயர் வாசிக்கப்பட்டபோதிலும் அவரையும் ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை.

 

ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடிவரும் இந்திய அணியில் உள்ள ஹனுமா விஹாரி பெயர் வாசிக்கப்பட்டதும் அவரை ஏலத்தி் எடுக்க போட்டி இருந்தது. 50 லட்சம் அடிப்படை விலையில் இருந்து உயர்ந்து, ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி விஹாரியை விலைக்கு வாங்கியது.

அடுத்ததாக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இடதுகை அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மேயர் பெயர் வாசிக்கப்பட்டு அடிப்படை விலை ரூ.70 லட்சம் வைக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. முடிவில் ரூ.4.20 கோடிக்கு ஆர்சிபி அணி ஹெட்மேயரை ஏலத்தில் எடுத்தது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ட்ரிக்ஸ் ரூ. ஒரு கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

வாங்கப்படாத வீரர்கள்

ஆனால், மனோஜ் திவாரி, சட்டீஸ்வர் புஜாரா, நியூசிலாந்து வீரர் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், குர்கீரத் சிங், ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், மார்டின் கப்தில் ஆகியோர் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

Sathish Kumar:

This website uses cookies.