விராட் கோலிக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து வம்பை வளர்த்து விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி
விராட் கோலி இந்திய அணிக்காக 2008-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார் 2014ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து வருகிறார் அதே நேரத்தில் விராட் கோலிக்கு முன்னதாகவே இந்திய அணியில் 2007ம் ஆண்டு அறிமுகமானவர் ரோஹித் சர்மா. முதல் ஐந்து வருட காலகட்டத்தில் அவரால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை .அந்த காலகட்டத்தில் விராட் கோலி விறுவிறுவென வளர்ந்து விட்டார்
2013 ஆம் ஆண்டிலிருந்துதான் ரோஹித் சர்மாவின் ஆட்டம் துவங்கியது தற்போது ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி முதல் இடத்திலும் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் இருக்கிறார் ரோகித் சர்மா தனது டெஸ்ட் ஆட்டத்தை பெரிய அளவில் துவக்கியிருக்கிறார். இப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் ரோகித் சர்மாவின் பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை. இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையே பெரிய சண்டை மறைமுகமாக இருந்து கொண்டு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசத் துவங்கினார்கள்
மேலும், கடந்த பல ஆண்டுகளாகவே இருவருக்கும் சண்டை இருந்து கொண்டு இருப்பதாகவும் பொதுவாக பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார் இதற்கு அனைத்து அணிகளும் வாழ்த்து தெரிவித்தனர் உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்
ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் விராட் கோலியை கிங் கோலி என்று அழைத்தோ அல்லது உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று அழைத்தோ தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் வெறுமனே… ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் விராட் கோலி’ என்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்தது
மேலும் அந்த புகைப்படத்தில் ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை அந்த அணி பதிவிடவில்லை, மாறாக ஹர்திக் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தது. விராட் கோலிக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர் ஹர்திக் பாண்டியா தான் என்பது போல் இந்த புகைப்படம் தெரிவிக்கிறது. மேலும், மற்ற அணிகள் எல்லாம் பிரம்மாண்டமாக எதிர் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறுமனே இப்படி செய்திருப்பது அந்த சண்டை தீயில் எண்ணெயை ஊற்றியது போல் தான் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.