மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பு மார்கண்டே தான்; ரிச்சர்ட்ஸ் புகழாரம் !!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பு மார்கண்டே தான்; ரிச்சர்ட்ஸ் புகழாரம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாயன்க் மார்கண்டே இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரும் பலம் என்று முன்னாள் வீரர் வி.வி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் லெக் ஸ்பின்னர்கள், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மாயாஜாலம் காட்டி வருகிறார்கள். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், குல்தீப் யாதவ், சுனில் நரைன், சாஹல் போன்றோர் அசத்தி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மயாங்க் மார்கண்டேவும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

6 போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். டிரென்ட் போல்ட் 7 போட்டியில் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டின் அதிரடி ஜாம்பவான் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன விவ் ரிச்சர்ட்ஸ் மார்கண்டேவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும், சீசனில் தொடக்கத்தில் முன்னிலை வகிக்கவும் இளம் வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா நோய்களையும் போக்கும் அத்யாவசியமான நோய்தீர்க்கும் மருந்தான சுழற்பந்து விச்சாளர் மயாங்க் மார்கண்டேயை கண்டுபிடித்துள்ளது.

பந்து வீச்சில் வியப்புக்குரிய வகையில் அசத்தி வருகிறார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்காக பாதையை கண்டுபிடிக்காமல் இருக்கிறது’’ என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் லெக் ஸ்பின்னர்கள், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மாயாஜாலம் காட்டி வருகிறார்கள். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், குல்தீப் யாதவ், சுனில் நரைன், சாஹல் போன்றோர் அசத்தி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மயாங்க் மார்கண்டேவும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை  6 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்த 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.