பாகிஸ்தானின் கராச்சி கிங்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் மிட்சல் ஜான்சன்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், மீண்டும் கிரிக்கெட் விளையாட டி20 லீக் தொடரில் ஒரு அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த வருடத்தில் பிக் பாஷ் லீக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி இரண்டு அணிகளும் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாய் இருந்தார்.

முதல் முறையாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், 13 விக்கெட்டுகள் எடுத்து, அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அரையிறுதி போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் 3 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்களை எடுத்து, அரையிறுதி போட்டியில் வெற்றி பெற உதவி செய்தார். ஐபில் இறுதி போட்டியில் புனே அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

தற்போது இந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் இன்னொரு அணிக்காக விளையாடவுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான்சன் ஒப்பந்தம் செய்துள்ளார். பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருடன் சேர்ந்து, இவர் விளையாடவுள்ளார்.

கராச்சி கிங்ஸ் அணி இவரை வாங்கிய சந்தோசத்தில் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்:

அடுத்த பிக் பாஷ் லீக் தொடருக்கு கோப்பையை வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியிடம் இருந்து ராஜினாமா பெற்றார். இந்த தகவலை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அக்டோபர் 24ஆம் தேதி உறுதி செய்தது.

கடந்த பிக் பாஷ் லீக் சீசனில் 3 ரன் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார் மிட்சல் ஜான்சன். பிக் பாஷ் லீக் வரலாற்றிலேயே நான்கு ஓவர் வீசி கம்மியான ரன் கொடுத்தவர் இவர் தான். ஒரே போட்டியில் ஒரு ஓவருக்கு மேல் மெய்டன் செய்த ஒரே பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் தான். அவரது 18வது பந்தில் தான் அவரது முதல் ரன்னையே கொடுத்தார். இதனால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.