அடுத்த வருசம் எந்த தப்பும் நடகவே கூடாது… முதல் அணியாக வேலையை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் !!

அர்ஜுன் டெண்டுல்கர் டிவால்ட் பிரேவிஸ் உள்ளடக்கிய இளம் வீரர்களைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இலண்டனில் பயிற்சி ஆட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ளது.

ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடந்த முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது.

இதற்கு முக்கிய காரணம் அணியின் கட்டமைப்பு சரியானதாக இல்லை என்றும், சீனியர் வீரர்களின் பங்களிப்பு மோசமாக உள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மும்பை அணியை விமர்சித்தனர்.

இதனால் 2023 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றும், இளம் வீரர்களை சிறந்த முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை லண்டனில் தலைசிறந்த அணிகளுடன் விளையாட வைத்து பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா,பும்ரா போன்ற வீரர்கள் சர்வதேச இந்திய அணியில் விளையாடுவதற்காக பிஸியாக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர், பிரேவிஸ், திலக் வர்மா,குமார் கார்த்திகேயா, ரமந்திப் சிங், ஹிர்திக் சோகின் போன்ற இளம் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.

வரும் நாட்களில் 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதில் எந்த ஒரு போட்டியுமே வியாபார நோக்கில் இல்லாமல் பயிற்சிக்காக மட்டுமே நடைபெறுவதால், எந்த ஒரு போட்டியில் பார்ப்பதற்கும் டிக்கெட் விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை விளையாடுவதற்கு பிசிசிஐயிடமும் எந்த ஒரு அனுமதியும் வாங்க தேவையில்லை என்ற தகவலும் வெளியாகிவுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது, இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.