மும்பை அணியின் விக்கெட் கீப்பரை எடுக்க போராடிய சென்னை, கடைசியில் தன்பக்கம் இழுத்த லக்னோ அணி!!

மும்பை அணிக்கு விளையாடி வந்த குவின்டன் டி காக், இம்முறை 6.75 கோடி லக்னோ அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் துவங்குவதற்கு முன்பாக, பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக்கொண்டு முயற்சித்து சிறந்த வீரர்களை எடுக்க போராடி வருகிறது. ரபாடா, ஸ்ரேயாஸ் அய்யர், தவான் போன்ற வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை, மும்பை போன்ற அணிகள் நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளதால் ஐபிஎல் ஏலத்தில் நிதானம் காத்து வருகின்றன. மற்ற அணிகள் குறைவான வீரர்களை தக்க வைத்திருப்பதால் புதிய வீரர்களை எடுப்பதற்கு முனைப்பு காட்டி, அதிக விலை கொடுத்து எடுத்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தனது அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த டிரென்ட் போல்ட்டை இழந்திருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய்க்கு அவர் ராஜஸ்தான் அணிக்கு சென்றிருக்கிறார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் லக்னோ அணிக்கு 6.25 கோடிக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். துவக்கத்திலிருந்தே இவரை எடுக்க பல அணிகள் போராடியது. ஆரம்பத்தில் 4.2 கோடி ரூபாய் வரை சென்னை அணி போட்டி போட்டது. பின்னர் மும்பை அணி 6 கோடி ரூபாய் வரை போட்டி போட்டது. இறுதியில் டெல்லி அணியும் போட்டி போட்டது. ஆனால் அவரை விட்டுக்கொடுக்காமல் 6.75 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது லக்னோ அணி.

ஏற்கனவே லக்னோ அணியில் கேஎல் ராகுல் எடுக்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது குவின்டன் டி காக் போன்று மற்றுமொரு துவக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் இருப்பதால், அந்த அணிக்கு சிறந்த துவக்க வீரர்கள் கிடைத்திருக்கின்றனர்.

இரண்டு முக்கிய வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் இழந்திப்பதால் அதன் ரசிகர்கள் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை ராபின் உத்தப்பா மற்றும் டிவைன் பிராவோ இருவரை மட்டுமே எடுத்திருக்கிறது மும்பை அதே தற்போது வரை யாரும் எடுக்காமல் மிகவும் நிதானம் காட்டி வருகிறது

Prabhu Soundar:

This website uses cookies.