56 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் கடைசி மற்றும் 56 வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டிகள் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அதே 12 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரன் ரேட் விகிதத்தில் மிகக் குறைவாக இருப்பதால் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் அந்த அணிக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும்.
அதேபோல், ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றுவிட்டாலும் முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடித்தால், குவாலிபைர் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பைனலுக்குள் செல்வதற்கு மீண்டும் வரும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இன்றைய போட்டியை மும்பை அணியும் எளிதில் எடுத்துக் கொள்ளாது. ஆதிக்கம் செலுத்தி வெல்லவே முயற்சிக்கும். இதன் காரணமாக, இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய போட்டியில் ஆடும் இரு அணி வீரர்களின் முழு பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), குவிண்டோன் டி காக் (கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பொல்லார்டு, மிட்செல் மெக்லாநகன் ராகுல் சஹார், ஜஸ்ப்ரிட் பும்ரா, லசித் மலிங்கா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
ஷுப்மான் கில், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & கீப்பர்), நிதீஷ் ராணா, சுனில் நாரைன், ரிங்கு சிங், ஹாரி கர்னி, சந்தீப் வார்ரியர், பிரசித் கிருஷ்ணா