11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை யொட்டி வீரர்களின் மெகா ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் பெற முடியும். தங்கள் அணியில் நீடிக்கச் செய்யும் வீரர்களின் விவரங்களை 4-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
தற்போது இந்த பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
1.ரோகித் சர்மா (கேப்டன்)
அதிக ஐ.பி.எல் பட்டங்களை வென்றுள்ள கேப்டன் ரோகித் சர்மாதான். மொத்தம் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து சாதனை படித்துள்ளார் ரோகித். அது மட்டுமில்லாமல் தர்ப்பது அசுர பார்மில் உள்ளார் ரோகித். இவரை கேப்டனாக வைத்து தான் மும்பை இந்தியன்ஸ் அணி கட்டமைக்கப்பட்டும்.
2.ஹர்திக் பாண்டியா
கண்டிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அகாவே இவரை மும்பை அணி விடாது எnபது தான் உண்மை. அதற்கேற்றார் போல் தற்போது அவரை தக்க வைத்துள்ளது மும்பை அணி.
3.ஜஸ்ப்பிரிட் பும்ரா
தற்போதைய கிரிக்கட் உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராகளில் ஒருவர் ஜஸ்ப்பிரிட் பும்ரா. இவரது மிகசிறந்த டெத் பந்து வீச்சு மும்பை அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளது.
மூன்றாவது வீரராக ஜஸ்ப்பிரிட் பும்ராவை ₹ 7 கோடி செலவில் தக்க வைக்கிறது மும்பை அணி.