மும்பை இந்தியன்ஸ் டீம் ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ஷாக் நியூஸ்! எல்லாமே புதுசு

மும்பை இந்தியன்ஸ் டீம் ரசிகர்களுக்கு கொடுத்த செம்ம ஷாக் நியூஸ்! எல்லாமே புதுசு!

இந்த வருட ஐபிஎல் தொடருக்கு புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் இருபது நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மும்பை கொல்கத்தா பெங்களூரு போன்ற அணிகள் தங்களது இயல்புநிலை பயிற்சியை துவங்கி விட்டனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு சென்னை அணியில் கொரோனா இருப்பதால் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாமல் ஆர்சிபி தவித்து வருகிறது. இதற்காக பாலன்ஸ் அணியை இந்த முறையை தேர்வு செய்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம் இதுவரை நான்கு முறை கோப்பையை வென்ற மும்பை அணி ஒரு முறை கூட கோப்பையை தக்க வைத்தது இல்லை. அந்த கவலையை தீர்ப்பதற்காக இந்த ஆண்டு வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. துபாய் மற்றும் அபுதாபி செல்வதற்கு முன்னதாக மும்பை அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் தங்களது ஐபிஎல் ஆர்வத்தை சமூகவலைதளத்தில் காட்டி இருந்தனர்.

மும்பை அணி சில தினங்களாக ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு புது அப்டேட் ஒன்று இருக்கின்றது என தொடர்ந்து தெரிவித்து வந்தது  அது என்னவென்று ரசிகர்கள் தெரிந்துகொள்ள தங்களது ஆர்வத்தை காட்டி வந்தனர்.

நேற்றைய தினம் அதனை ட்விட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புத்தம்புது ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்தது. முன்பு அடர் நீல நிறத்தில் இருந்தது. தற்போது ஆங்காங்கே சற்று வெளிர் நிற நீலத்தில் இருக்கிறது. பார்ப்பதற்கு புதுப்பொலிவுடன் இருக்கும் இந்த ஜெர்சிக்கு மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.