சிஎஸ்கேவில் விளையாடிய வீரரை குறிவைத்த மும்பை இந்தியன்ஸ் ! ரோகித் சர்மாவின் திட்டம் என்ன ?

சிஎஸ்கேவில் விளையாடிய வீரரை குறிவைத்த மும்பை இந்தியன்ஸ் ! ரோகித் சர்மாவின் திட்டம் என்ன ?

இந்த 14வது ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை படுமோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்களில் மீண்டும் வெற்றி பெற்றது. இதன்பிறகு நடைபெற்ற டெல்லி மற்றும் பஞ்சாப் எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் மற்றும் -0.032 நெட் ரன் ரேட் பெற்று நாலாவது இடத்தில் இருக்கிறது. ஐந்து முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த சீசனில் சிறப்பாக இல்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகலீஜ்னை தேர்வு செய்ய இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஜேம்ஸ் நீஷம் கூறி இருக்கிறார். இவர் நெட் பவுலர் அல்லது ரிசர்வ் வீரராக அணியில் இடம்பெறுவார். இதை மும்பை இந்தியன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஸ்காட் குகலீஜ்ன் 2019 ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நெகிடிக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை வீழ்த்தி 8.88 எகானமி வைத்திருந்தார். இதன்பிறகு 2020 சீசனில் லுங்கி நெகிடி வந்தபிறகு இவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. எனவே, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.