ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணிக்கு கோடிகளை திட்டமிட்டு குறைத்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் குழு.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெறும் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கவுல்டர் நிலை சென்னை அணி எடுப்பதற்கு முதலில் முயற்சித்தது. இதனை கண்டு இதனை கண்டு அவரை எடுக்க மும்பை அணியும் போட்டிக்கு வந்தது.
இந்நிலையில், இந்த ஏலம் எடுப்பதற்கு முன்பாக சென்னை அணிக்கு 9 கோடி ரூபாய் மீதமிருந்தது. அதேபோல மும்பை அணிக்கு 13 கோடி ரூபாய் மீதமிருந்தது.
கவுல்டர் நைலை எடுப்பதற்கு இரு அணிகளும் தொடர்ந்து போட்டிபோட்டு வந்தன. ஏலம் 7.5 கோடி வரை சென்றபோது சென்னை அணி நிறுத்திக்கொண்டது. இறுதியில் மும்பை அணி 8 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதனால், மும்பை அணிக்கு தற்போது வெறும் 5 கோடி மட்டுமே மீதம் இருப்பதால் கடும் சிக்கலில் உள்ளது.
சென்னை அணிக்கு தற்போது வரை 9 கோடி மீதம் உள்ளது.