நான் பெட்டிங்கில் ஈடுபடவில்லை என முனாப் பட்டேல் ஆவேசம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தற்போது பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். குஜராத் பந்துவீச்சாளர் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த உள்ளூர் டி20 போட்டியில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.

எனினும், தொடக்கத்தில் அவரது பெயரை குறிப்பிடவில்லை. பின்னர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு கழகம் முனாப் பட்டேலின் பெயரை அந்த பட்டியலில் சேர்த்தது. முன்னதாக அந்த டி20 லீக்கின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டதாகவும் தகவல் வந்துள்ளது.

MUMBAI, INDIA – APRIL 28: Mumbai Indians player Munaf Patel during the practice session at Wankhede Stadium on April 28, 2012, in Mumbai, India. (Photo by Kunal Patil / Hindustan Times via Getty Images)

இந்த டி20 லீக் தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு கழகத்தின் பார்வைக்கு வந்தது. மேலும், ஒரு சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர் சாதாரண உள்ளூர் போட்டியில் பிக்சிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என முனாப் பட்டேல் தெரிவித்திருந்தார்.

“சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபில் போட்டிகளில் விளையாடியவர் உள்ளூர் போட்டிகளில் பிக்சிங் செய்வாரா என்பது உங்களுக்கே தெரியும். நான் பணம் பெற்றால், தொடக்க விழாவிற்கு கூடவா செல்ல கூடாது? ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் வருவார்கள், அவர்கள் பணம் பெறாமலா வருவார்கள்? அவர்களும் வருவதற்கு பணம் பெறுவார்கள் என்று உங்களுக்கு தெரியும்,” என முனாப் பட்டேல் தெரிவித்தார்.

இந்த போட்டியில் ஏமாற்றமாட்டேன் என அவர் இதை பற்றி கூறினார். மேலும், இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் என்னை இழுக்க வேண்டாம் எனவும் வார்னிங் கொடுத்துள்ளார்.

MUMBAI, INDIA – APRIL 28: Mumbai Indians player Munaf Patel during the practice session at Wankhede Stadium on April 28, 2012, in Mumbai, India. (Photo by Kunal Patil / Hindustan Times via Getty Images)

“என் வாழ்க்கையே கிரிக்கெட்டை சுற்றி தான் இருக்கிறது. நான் கிரிக்கெட்டை விளையாடுவதை தவிர வேறு எதுவும் செய்யமாட்டேன். என்னை யார் பிரச்சனையில் இழுத்தாலும், நான் அவர்களை சும்மா விடமாட்டேன். நான் விளையாடவும் இல்லை, பிக்சிங்கும் செய்யவில்லை. இதனால், என் மேல் பழி போடுவதற்கு முன்பு தக்க ஆதாரம் வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

“என்னை கேட்பதற்கு பதில், தொடக்க விழாவிற்கு வந்த முனாப் பட்டேலின் பெயரை குறிப்பிட்டதற்கு காரணம் என்னவென்று அவர்களை கேளுங்கள்,” என முனாப் பட்டேல் தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.