கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார் முரளி விஜய் !!

கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார் முரளி விஜய்

இந்திய கிர்க்கெட் அணியின் துவக்க வீரரான முரளி விஜய், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்ற முரளி விஜய் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து சொதப்பியதால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கே.எல் ராகுல் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி வருவதால், முரளி விஜய்யின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆனால், முரளி விஜய் இங்கிலாந்திலேயே தங்க உள்ளார். மீதம் உள்ள கவுண்டி சாம்பியன்ஷிப்புக்காக எசக்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய். எதிர்பார்த்தது போலவே, இங்கிலாந்தில் மோசமான பார்மில் இருந்த விஜய், இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார்.

“நான் இந்திய அணியுடன் ஒரு மாதமாக இங்கு தான் இருந்தேன். ரசிகர்களின் கூட்டம் நிச்சயமாக மகிழ்ச்சியை தந்தது. எசக்ஸ் அணிக்காக விளையாட காத்திருக்க முடியவில்லை மற்றும் கண்டிப்பாக சில போட்டிகளை வெற்றி பெற்று தருவேன்,” என எசக்ஸ் கிரிக்கெட் அணியின் இணையத்தளத்திடம் கூறியிருந்தார் முரளி விஜய்.

“முரளி விஜய் இங்கு வர தேர்வு செய்ததற்கு சந்தோசமாக இருக்கிறது. மேல் வரிசையில் ரன் அடிக்க கூடிய சிறந்த பேட்ஸ்மேன் அவர்,” என எசக்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அந்தோணி மெக்ராத் கூறியுள்ளார்.

“விஜயின் ரன் அடிக்க கூடிய திறமை போட்டியின் போக்கையே மாற்றும். இந்த சீசனின் முடிவில் அது போன்ற ஒரு வீரருக்காக தான் காத்திருந்தோம். இந்த செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது,” என அந்தோணி மேலும் கூறினார்.

“இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது மற்றும் அடுத்த மாதம் எங்களுக்கு சில பெரிய அணிகளுடன் போட்டிகள் வரவுள்ளது. இதனால், அனுபவம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உள்ள வீரர் ஒருவர் அணியில் இருந்தால், கண்டிப்பாக ஆட்டத்தின் போக்கையே மாற்றும்,” என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேலும் கூறினார்.

Mohamed:

This website uses cookies.