போங்கடா.. நீங்க கூப்பிடும் போதெல்லாம் வர முடியாது – இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது முரளிதரன், ஜெயவர்தனே பாய்ச்சல்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நிராகரித்தனர் முரளிதரன், ஜெயவர்தனே.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த முரளிதரன், ஜெயவர்தனே
இலங்கை அணி முரளிதரன், சங்ககரா, ஜெயவர்தனே விளையாடிய காலத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் தேய்பிறையாகி வருவதையடுத்து முன்னாள் லெஜண்ட்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அணுகியது.

தேசிய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு வியாழனன்று முத்தையா முரளிதரன், மகேலா ஜெயவர்தனே ஆகியோரை அணுகி அணிக்கு ஆலோசனை மட்டத்தில் பொறுப்பு வகிக்க முடியுமா என்று கேட்டது.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று முரளிதரன், ஜெயர்வதனேயிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், இருவரும் ஆலோசனை வழங்கும் பணியில் சேர மறுத்துவிட்டனர்.

இலங்கை கிரிக்கெட் வாரிய ஆலோசகர்களாக இணைந்து பணியாற்ற, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அரவிந்த டி சில்வா, சங்க காரா, மஹேல ஜெயவர்த்தனே, முத்தையா முரளிதரன், ரோஷன் மஹானம ஆகியோருக்கு விளையாட்டு அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்திருந்தார். 

இதை மஹேலா ஜெயவர்த்தனே நிராகரித்து பதிவிட்டார். அதில், ’நான் ஒரு வருடம் இலங்கை கிரிக்கெட் கமிட்டியிலும் ஆறு மாதம் சிறப்பு ஆலோசனைக் குழுவிலும் இருந்தேன். நான் சொன்ன எந்த பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. இந்த கிரிக்கெட் அமைப்பு மீது எனக்கு எந்த நம்பிக் கையும் இல்லை’ என்று காட்டமாக கூறியிருந்தார்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் நிர்வாகம் மோசனமான நிலையில் இருக்கும்போது, எங்களை அழைப்பது நேர்மையற்ற, தந்திரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயவர்தனே ‘‘இந்த முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாராவது ஒருவர் நேரத்தை விரயமாக்க விரும்பினால், எங்களை பயன்படுத்தாதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயவர்தனே இதற்கு முன் ஒரு பயிற்சியாளர் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘அணி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது முன்னாள் வீரர்களை கலந்து ஆலோசிக்காமல், மோசமான நிலையில் இருக்கும்போது இப்படி அழைப்பது வருந்தத்தக்கது என்றும் இது நேர்மையற்ற, தந்திரமான நடவடிக்கை என்று கருதுவதாக தெரிவித்துள்ளார். இங்கு பொறுப்பில் இருந்த மஹேலா ஜெயவர்த்தனே, தனது அனுபவத்தின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். அதை அடிப்படையாக வைத்து தானும் நிராகரிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Editor:

This website uses cookies.