வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிப்பு
வங்காள தேசம் அடுத்த மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
டெஸ்ட் தொடர் ஜூலை 4-ந்தேதி முதல் ஜூலை 16-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), 2. தமிம் இக்பால், 3. இம்ருல் கெய்ஸ், 4. முஷ்பிகுர் ரஹிம், 5. மெஹ்முதுல்லா, 6. லித்தோன் தாஸ், 7. மொமினுல் ஹக்யூ, 8. மெஹிதி ஹசன், 9. தைஜூல் இஸ்லாம், 10. கம்ருல் இஸ்லாம் ரஃபி, 11. ருபெல் ஹொசைன், 12. நுருல் ஹசன், 13. அபு ஜெயத் சவுத்ரி, 14. நஸ்முல் ஹொசைன் ஷன்டோ, 15. ஷபியுல் இஸ்லாம்.
ஜூலை 4 முதல் அன்டிகுவாவில் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசம் சுற்றுப்பயணம் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் ஜூலை 12 முதல் 16 வரை தொடங்கும். இரு அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20களுடன் விளையாடி சுற்றுப்பயணம் முடியும்.