தோனி கெத்தான கேப்டனா இருக்க இது மட்டும்தான் காரணம்; வெளிவராத ரகசியத்தை கூறிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

தோனி கெத்தான கேப்டனா இருக்க இது மட்டும்தான் காரணம்; வெளிவராத ரகசியத்தை கூறிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

தோனி சிறந்த கேப்டனாக விளங்குவதற்கு அவரிடம் இருக்கும் இந்த ஒரு பண்பே காரணமென பேசியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. அந்த அணி ஆடிய பத்து சீசன்களில் எட்டு முறை இறுதிப் போட்டிக்கும், ஆடிய அனைத்து முறையும் பிளே-ஆப் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. அதில் மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

The report added that Sri Lanka’s new President Gotabaya Rajapaksa had personally invited Muttiah Muralitharan to accept the post of the Governor of the Northern Province.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இத்தனை ஆண்டுகளாக சிறப்பாக வழிநடத்தி வருகிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் தோனி சிறந்த கேப்டனாக விளங்குவதற்கு அவரிடம் இருக்கும் இந்த ஒரு பண்பு மட்டுமே காரணமென, 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய முன்னாள் வீரரும் இலங்கை அணியை சேர்ந்த ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி அவர் கூறுகையில், “நான் ஆடிய காலங்களில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடித்தாலும், பவுளர் வீசிய பந்து சிறப்பாக இருந்தால் கைதட்டி உற்சாகப்படுத்துவார். எந்தவொரு அணி கேப்டனும் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்துவிட்டால் பவுலருக்கு இப்படி ஒரு உற்சாகத்தை அளிக்கமாட்டார். அதை நான் தோனியிடம் கண்டேன்.

மேலும், பவுலர் எதாவது தவறு செய்துவிட்டால் அதை மற்ற வீரர்கள் மத்தியில் தெரிவிக்காமல், தனியாக அழைத்து இந்த தவறு இருக்கிறது. அதை அடுத்த முறை நடக்காமல் சரிசெய்து  கொள்ளுங்கள் என பக்குவமாக எடுத்துச் செல்வார். மற்ற கேப்டன்களிடம் இருந்து அவர் மாறுபடுவதற்கும் வெற்றியாளராக விளங்குவதாகவும் இதுவே காரணம் என நான் நினைக்கிறேன்.” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.