இலங்கையின் வடக்கு மாகான முதலவராக முத்தையா முரளிதரன் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளீதரன் வடக்கு மாகாணம் கவர்னராக நியமனம் செய்யப்பட இருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே முரளீதரனை வடக்கு மாகாணம் கவர்னராக பொறுப்பேற்கும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர் கவர்னர் பதவியை ஏற்கலாம் எனத்தெரிகிறது.  ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

The report added that Sri Lanka’s new President Gotabaya Rajapaksa had personally invited Muttiah Muralitharan to accept the post of the Governor of the Northern Province.

47 வயதாகும் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் இலங்கையில் நடைபெற்ற போரின் போது ராஜபக்ச தரப்பிற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வடக்கு மாகாண பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கு மாகாண கவர்னராக அனுராதா யகம்பத், வடக்கு மத்திய மாகாண கவர்னராக திசா விதரனா ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்து உள்ளது.
முத்தையா முரளிதரன் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தமிழர்கள் பகுதியில் எதிர்ப்புகள் எழுந்திருந்தது. இந்தநிலையில், வடக்கு மாகணப் பகுதிக்கு ஆளுநராவதற்கு முத்தையா முரளிதரனுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்புவிடுத்துள்ளார். அதனையடுத்து, வடக்கு மாகணப் பகுதிக்கு முத்தையா முரளிதரன் ஆளுநராவது உறுதியாகியுள்ளது.
இந்தியத் தமிழரான அவர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால், சிங்களப் பேரினவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளித்ததாக தமிழ் மக்கள் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தற்போதைய இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை வெளிப்படையாக ஆதரித்தவர். 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

Sathish Kumar:

This website uses cookies.