லிமிடெட் ஓவர் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எனது பேட்டிங் பொசிசன் இப்படித்தான் இருக்குமென ஹின்ட் கொடுத்திருக்கிறார் கே எல் ராகுல்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் வருகிற 27-ஆம் தேதி துவங்குகிறது. இதில் 3வித போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளின் துணை கேப்டன் ராகுல் இடம் பெற்றிருக்கிறார்.
லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா இல்லாததால் இவருக்குத் துணை கேப்டன் பதவி கொடுக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் துவக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் ரோகித் சர்மா அணியில் இருந்த காலத்தில் இவரது பேட்டிங் வரிசை 4 அல்லது 5 ஆவது இடத்தில் இருந்திருக்கிறது. தற்போது அவர் இல்லாததால் தவானுடன் இணைந்து போட்டியை துவங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்நிலையில் இவர் தனது பேட்டிங் போசிஷன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகளில் எப்படி இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
“நான் எந்த போட்டியில் விளையாடுகின்றேனோ? அதற்கு ஏற்றார்போல எனது பேட்டிங் போசிஷன் இருக்கும். ஒருநாள் போட்டிகளில் கடந்த தொடரில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கினேன். அதேபோல டி20 போட்டிகளில் 5 ஆவது வீரராக களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க என்னால் முடிந்தது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
நான் மிகப்பெரிய ஹிட்டர் இல்லை என்பதை நன்கு அறிவேன். ஆனால் அணிக்கு தேவையான ரன்களை குவிக்க முடிகிறது. அந்த வகையில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் வரும் போட்டிகளிலும் அதையே தொடர்வேன்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நான் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும் எனக்கான இடம் சரிவர கிடைப்பதில்லை. சில போட்டிகளில் விளையாடியும் சில போட்டிகளில் வெளியிலும் அமர்த்தப்பட்டேன். ஆனால் கடந்த சில தொடர்களாக எனக்கு தொடர்ந்து இடம் கிடைத்து வருகிறது. என்னை நிரூபிக்கவும் நல்ல வாய்ப்பாக அமைகிறது. இனி தொடர்ச்சியாக இடம் பெறுவேன். ஆஸ்திரேலிய தொடரில் எனது முழு பேட்டிங்கை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்.” என்றார்.