இந்த சம்பவத்தினால் என் கிரிக்கெட் வாழ்க்கை ‘ரிஸ்க்’ – வேதனையில் பாண்ட்யா!

India's Mahendra Singh Dhoni (L) speaks with teammate Hardik Pandya during the 2019 Cricket World Cup group stage match between Bangladesh and India at Edgbaston in Birmingham, central England, on July 2, 2019. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

இந்த சம்பவத்தினால் என் கிரிக்கெட் வாழ்க்கை ‘ரிஸ்க்’ – புலம்பும் பாண்ட்யா!

இந்த ஒரு சம்பவத்தினால் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழக்கை ரிஸ்கில் இருப்பதாக ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி ஆல்–ரவுண்டராக இருந்துவந்த ஹர்திக் பாண்ட்யா இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள், 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 சர்வதேச டி–20 போட்டியில் விளையாடியுள்ளார்.

2016ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி லிமிடெட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவந்த இவர் டெஸ்ட் அணியில் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பைக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை.

முதுகுப்பகுதியில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு தொடர்ந்து சிகிச்சையில் ஈடுபட்டுவந்தார். ஜனவரி மாதம் முழுமையாக குணமடைந்து தேசிய கிரிக்கெட் அகடெமியில் பயிற்சிக்கு திரும்பினார். இருப்பினும் முன்புபோல அவரால் நீண்டநேரம் ஆடமுடியவில்லை என உடல்பயிற்சி நிபுணர்கள் தெரிவித்தனர்.

India’s Hardik Pandya fields off his own bowling during the third one day international cricket match between New Zealand and India at Bay Oval in Mount Maunganui on January 28, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து ஹர்டிக் பாண்ட்யா மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

“கடந்த 2018ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதுகுப் பகுதியில் காயமடைந்த போது எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன். இதற்கு ஆப்பரேஷன் செய்து கொண்ட பின் நன்றாக ஆடமுடிந்தது.

தற்போது டெஸ்டில் பங்கேற்பது கடினமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இதனால் எனது முதுகுப் பகுதிக்கு ஆபத்து ஏற்படலாம். ஒருவேளை டெஸ்டில் விளையாடினால், ஒருநாள், டி20 போட்டியில் களமிறங்க முடியுமா? அல்லது சிறப்பாக செயல்பட முடியுமா? என்று தெரியவில்லை. இந்த முதுகுப்பகுதி காயத்தால் என்னால் முழுமையான வீரனாக ஆடமுடியவில்லை.” என்றார்.

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஹர்திக் பண்டியா காதலித்துவந்த  பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமூக வலைதளம் மூலமாக இதை உலகிற்கும் தெரியப்படுத்தினார் பாண்டியா. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பா ஸ்தானம் பெறப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

Prabhu Soundar:

This website uses cookies.