ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். மொத்தமாக 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
9 டி20 போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளையும், அதேபோல ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட்டையும் ஜான் ஹாஸ்டிங்ஸ் கைப்பற்றியிருக்கிறார்.
தற்பொழுது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இதன் பின்னர் நிறைய அனுபவம் தனக்கு கிடைத்ததாக கூறியிருக்கிறார்.
கொசி டஸ்கேர்ஸ் கேரள அணியில் நான் விளையாடிய தருணம்
2011ஆம் ஆண்டு கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா அணி என்னை ஏலத்தில் எடுத்தது. நான் ஏலத்தில் எடுத்த பொழுது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் போட்டியில் விளையாடி கொண்டிருந்தேன். என்னுடன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் ஒயிட் ஆகியோரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேமரூன் ஒயிட் ஐபிஎல் எழுத்தில் ஒரு மில்லியன் டாலருக்கு வாங்க பட்டார்.
நானும் ஐபிஎல் ஏலத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி சார்பாக 20 ஆயிரம் டாலருக்கு வாங்க பட்டேன். அது என்னால் எப்போதும் மறக்க முடியாது. ஐபிஎல் ஏலத்தில் நான் வாங்கப்பட்ட உடன் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். அந்த தருணத்தை எப்போதும் மறக்க முடியாது என்று ஜான் ஹாஸ்டிங்ஸ் கூறியுள்ளார்.
சென்னை அணியில் விளையாடிய பின்னர் நிறைய அனுபவம் எனக்குக் கிடைத்தது
2014 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு ஜான் ஹாஸ்டிங்ஸ் விளையாடினார். அப்போது சென்னை அணியில் நான் சர்வதேச அளவில் மிகச் சிறந்த கேப்டன்களின் கீழ் விளையாடினேன். மகேந்திர சிங் தோனி பிரெண்டன் மெக்கல்லம் டுப்லஸ்ஸிஸ் மற்றும் டுவைன் பிராவோ போன்ற வீரர்கள் விளையாடிய போது எனக்கு கிரிக்கெட் பற்றிய அனுபவம் நிறைய அதிகரித்தது.
சென்னை அணியில் விளையாடிய பின்னர் என்னுடைய போட்டியில் நிறைய மாற்றங்களை நான் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். டி20 போட்டிகளில் மட்டும் அல்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நிறைய விஷயங்கள் நான் சென்னை அணியில் விளையாடிய போது கற்றுக் கொண்டேன் என்றும் ஜான் ஹாஸ்டிங்ஸ் அண்மையில் கூறியுள்ளார்.
ஆனால் ஜனன ஸ்டிக்ஸ் ஐபிஎல் தொடரில் அவ்வளவாக விளையாடவில்லை. மொத்தமாகவே மூன்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணிக்காக வாய்ப்புக் கிடைத்த பொழுது தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கிய ஜான் ஹாஸ்டிங்ஸ் 2017 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.