ஆஸ்திரேலியாவின் இந்தியா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நாளை நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாண் போட்டிகளில் இந்திய அணி 3-1 என் வெற்றிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
5 போட்டிகளையும் வென்று இந்திய அணி ஆஸ்திரேலியாவை துடைத்து அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சற்று பேட்டிங் ஆர்டரில் சொதப்பி 4ஆவது போட்டியை 21 ரன் விதயாசத்தில் கைவிட்டது. எனினும் ஆஸ்திரேலியாவிற்கு சற்று ஆருதல் அளிக்கும் விசயமாகும் இது.
5ஆவது போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானம் சர்ச்சைக்கு பெயர் போன மைதானமாகும். கடையசியாக இந்திய அணி இங்கு விளையாடியது 2014 உலககோப்பை டி20 போட்டியில், அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக 79 ரன்னில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதின, அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்த 358 ரன்னையும் திருப்பி அடித்து வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி.
அப்படிப்பார்த்தால் இந்திய அணிக்கு இது சாதகாமன ஆடுகளமாகும். மேலும், கடைசியாக இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தை மிக மிகவும் சுழற்பந்து வீச்சிற்க்கு சாதகமாக பதப்படுத்தி 3 நாளில் போட்டி முடிவடைந்ததும், சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அதற்க்கு இந்த மைதானத்திற்க்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் வேறு கதை.
தற்போது 5ஆவது ஒருநாள் போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணியைப் பார்ப்போம்.
1.ரோகித் சர்மா
அதிரடி துவக்க வீரர். இவருக்கு அறிமுகம் தேவையில்லை. 4ஆவது ஆட்டத்தில் கோலிக்கும் இவருக்கு சலசலப்பு ஏற்ப்பட்டு 65 ரன்னில் ரன் அவுட் ஆனதும் சற்று ஏமாற்றமே. இவர் இருதிருந்தால் ருதரதாண்டவத்தை ஆடி இந்திய அணி வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ. இவர் தான் இந்திய அணியின் துவக்க ஆட்டத்தில் ஆடப் போகிறார்.
2.அஜின்க்யா ரகானே
தவானின் விடுப்பு காரணமாக இலங்கை தொடரில் இவருக்கு துவக்க ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதலில் சரியாகப் பயன்படுத்தத் தவறிய அவர் தற்போது ஆஸ்திரேலியாவுடனான நான்கு போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்து தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டார்.
3.விராட் கோலி (கேப்டன்)
பேட்டிங்கில் சொதப்பாமல் சிறத்தையான ஃபார்முடன் இந்திய அணியின் கேப்டனாக வலம் வருபவர். கந்த போட்டியில் சூது செய்ய நினைத்து 4ஆவது விக்கெட்டில் இருந்து மாற்றி மாற்றி இறக்கிவிட எடுபடாமல் போக, தோனியின் இடம் 7ஆவது விக்கெட்டிற்கு சென்றது. இது சற்று பெரிய ரிஸ்க் தான் அந்த ரிஸ்க் பலனலிக்காமல் போனதும் இந்திய அணி தோற்றது.
4.லோகேஷ் ராகுல்
டெஸ்ட் தொடரில் நல்ல துவக்க ஆட்டக்காரர் என நிரூபித்தவர். அடுத்தடுத்து 8 அரை சதங்களை அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது இடத்தை தக்கவைத்தவர் இவர். ஆனால், ஒருநாள் தொடரில் சோபிக்கத்தவறுகிறார். விராத் கோலி இவருக்கு சில முறை மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்பளித்தும் சொதப்பி தான் வைத்தார்.
தற்போது இந்திய அணி தொடரை வென்று விட்டதால் அணியில் சரியான இடத்திற்கு வீரர்களை வைக்க சற்று ரிஸ்க் எடுத்து வருகிறார் விராட் கோலி. இதன் பொருட்டு லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
5.கேதார் ஜாதவ்
அணிக்கு அவ்வப்போது சரியான சமயத்தில் கைகொடுத்து வருகிறார். 4ஆவது போட்டியில் கூட ஆரோன் பின்ச் – வார்னர் ஜோடியயை பிரிக்க முடியாமல் திணறிய இந்திய அணிக்கு அந்த ஜோடியை பிரித்துக் கொடுத்து அணிக்கு உதவினார்.
பேட்டிங்கிலும் எப்போதும் 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணிக்கு பேட்டிங்கில் உந்துதலாக இருக்கிறார்.
6.ஹர்திக் பாண்டியா
ஆல் ரவுண்டர். சமீபபாக பல்வேறு பாராட்டுக்களை பெற்று வருகிறார். பேட்டிங்கில் தோனிக்கு மாற்றாகவும் வந்து விடுவார் போல. நன்றாக பேட்டிங்கும் பந்து வீச்சும் செய்கிறார்.
4ஆவது போட்டி முடிவில் பேசிய கோலி இனி வரும் காலங்களில் 4ஆவது விக்கெட்டிற்கு ஹர்திக் தான் ஆடுவார் என திட்டவட்டமாக மறைமுகமாகவும் சொல்லி வைத்திருக்கிறார்.
7.எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்)
ஃபின்சிங் ஸ்டார். அதிரடி வீரர். ஆனால் இவருக்கான இடத்தில் இறங்கினால் தான் இவருடைய அனுபவமும் திறமையும் அணிக்கு உதவும் என்பதை அணி நிர்வாகமும் கோலியும் உணர வேண்டும். 4ஆவது போட்டியில் 7ஆவது விக்கெட்டிற்கு இறக்கிவிடப்பட்ட தோனி அணியை அந்த சமயத்தில் அணியை கரை சேர்க்கவில்லை. ஆனால், அவரது அனுபவம் அணிக்கு இன்னும் உதவும்.
8.யுஜவேந்திர சகால்
கோலியின் செல்லப்பிள்ளை. ரிஸ்ட் ஸ்பின்னர். இது வரை இந்த தொடரில் 4 போட்டிகளில் 6 விக்கெட் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இவர் வலது கை பந்து வீச்சாளர் ஆகவே அணிக்கு சற்று கூடுதலான பலம்.
9.அக்சர் படேல்
ஆல் ரவுண்டராக அறியப்படுபவர். ஆனால், சரியாக குறிப்பிடத்தக்க வகையில் பேட்டிங் பர்ஃபாமென்ஸ் இன்னும் இல்லை. பவுலிங்கில் சற்று கை கொடுக்கலாம். அணியில் சுழற்சி முறையில் வைக்க இவர் அனீல் சேர்க்கப்படலாம்.
10.முகமது சமி
வேகம் இவருக்கு கை கொடுக்கும் கடந்த போட்டியில் சற்று சோபிக்கவில்லை எனிலும் பவுலிங்கில் ஃபார்மில் தான் இருக்கிறார்.
11.உமேஷ் யாதவ்
கடந்த போட்டியில் துவக்கத்தில் சொதப்பினாலும் பின்னர் இறுதியில் சரியான நேரத்தில் அடுத்தடுத்து ஸ்லோவர் பந்துகளை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.