வரலாற்றில் இதுவே முதல் முறை… சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது நமீபியா அணி !!

அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அபார வெற்றி பெற்ற நமீபியா அணி சூப்பர் 12 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நமீபியா அணியும், அயர்லாந்து அணியும் மோதின.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியின் முதல் மூன்று வீரர்களை தவிர மற்றவர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டவில்லை.

நமீபியா அணி சார்பில் அதிகபட்சமாக ஜான் ப்ரைலிங் 3 விக்கெட்டுகளையும், டேவிட் வீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய நமீபியா அணி கிரைக் வில்லியம்ஸ் (15) மற்றும் ஜான் க்ரீன் (24) ஆகியோர் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இதன்பின் களத்திற்கு வந்த கெர்கட் எராஸ்மஸ் 53* ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வீஸ் 14 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய நமீபியா அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்தசுற்றான சூப்பர் 12 சுற்றுக்கும் நமீபியா அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.