சூதாட்ட புகார்: நாசர் ஜம்ஸட் 10 ஆண்டுகள் தடை!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் நசீர் ஜாம்ஷெட் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் சிக்கியதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு 10 ஆண்டு காலம் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத் இந்தியாவிற்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

மேலும், தற்போது இங்கிலாந்தில் தடுமாறி வரும் இந்தியாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தான் அதிக பயிற்சிப் போட்டிகளில் ஆடியதால் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டது என கூறி இருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இலங்கை அணி மீது நடத்திய தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின் பல அணிகளும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்துவிட்டது. அதனால், பாகிஸ்தான் சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாட்டில் தான் சொந்த மண் போல கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்ற அனுபவத்தை, ஆசிய கோப்பை தொடரின் போது இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சர்பராஸ். விராட் கோஹ்லியின் அணி வலிமையானதாக இருக்கும் எனவும், இப்போதைக்கு எங்கள் அணி வீரர்களின் உடற்தகுதியில் தான் கவனம் செலுத்த

உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
<
சர்பராஸ் இங்கிலாந்து தொடர் குறித்து பேசுகையில், பாகிஸ்தான் அணி 25 நாட்கள் முன்பே சென்று, மூன்று பயிற்சி போட்டிகளில் பங்கேற்றோம். அதுதான், எங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில், இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி போட்டியில் தான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா பல பயிற்சி போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும் என கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் கூறிய நிலையில், பாகிஸ்தான் கேப்டனும் அதையே தெரிவித்துள்ளார்

Vignesh G:

This website uses cookies.