இவர்தான் ஒரிஜினல் “மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்று டுவிட் செய்திருக்கும் நடராஜன் !

இவர்தான் ஒரிஜினல் “மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்று டுவிட் செய்திருக்கும் நடராஜன் !

சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி கோப்பையை வென்றது குறித்து நடராஜன் தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டதன் காரணமாக நடராஜன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வடிவங்களிலும் அறிமுகமாகி 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெற வில்லை. ஏனென்றால் நடராஜன் ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ச்சியாக விளையாடியதால் அவரது குழந்தை பிறப்பிற்கு கூட செல்ல முடியாமல் இருந்தார். இதனால் தற்போது லீவ் எடுத்துள்ளார் நடராஜன்.

இந்நிலையில்,  கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையில் செயல்பட்ட தமிழக அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை மட்டும் பெற்று சிறப்பாக விளையாடி இருந்தனர். இதன்மூலம் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் குஜராத் அணியுடன் மோதியது தமிழக அணி அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் தமிழக அணி பலரது பாராட்டுக்களைப் பெற்று வந்தது. அந்தவகையில் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனும் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். அதிலும் அணியை சிறப்பாக வழிநடத்திய தினேஷ் கார்த்திக்கை குறிப்பிட்டு நடராஜன் ட்வீட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜன் தனது ட்விட்டரில் ” நம் தமிழக அணி சையது முஷ்டாக் அலி டி20 தொடரை வென்றது வீரர்களின் திறமையையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அணியை சிறப்பாக செயல்படுத்திய தினேஷ் கார்த்திக்கிற்கு எனது வாழ்த்துக்கள். இவர் தான் உண்மையான மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்று ட்வீட் செய்திருக்கிறார் நடராஜன். இருந்தாலும் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Prabhu Soundar:

This website uses cookies.