வீடியோ : ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று’ – நேதன் லைன் பற்ற வைத்த நெருப்பு, தள்ளி வைக்கப்பட்ட மேட்ச்

ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின்னர் நேதன் லைன் செய்த வினையால் நடக்கவிருந்த முதல் தரப் போட்டி அரை மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் முதல் தரப் போட்டியான ஜே.எல்.டீ செஃப்ஃபீல்டு ஷீல்டு தொடரின் ஒரு போட்டி நடந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேனான போட்டியின் போது நியூ சௌத் வேல்ஸ் அணியின் நேதன் லைன் செய்த ஒரு குரும்பு வேலையால் போட்டி அரை மணி நேரம் தடைபட்டது.

நியூ சௌத் வேல்ஸ் அணி பேட்டிங்க் செய்து கொண்டிருந்த போது, நேதன் லைன் டோஸ்ட் செய்வதற்காக டோஸ்டர் மிசினில் ரொட்டியை வைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொடிருந்தார். பினர் டோஸ்டர் ரெடி ஆகி ரொட்டி குதித்து வெளியே வர அதனை எடுத்து மீண்டும் அதிலேயே வைத்து விட்டு விளையாடி இருக்கிறார் லைன். பின்னர் திடீரென் அது பாப் அவுட் ஆகி தீ பற்றிக் கொண்டது. இதனால் ஸ்டேடியத்தில் பாதுகாப்பிற்க்கக வைக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை அலாரம் அடிக்க ஆர்மபித்துவிட்டது.

பின்னர் உடனியாக சுதாரித்த காவலர்கள் தீ பற்றிக்கொண்டது என நினைத்து வீரர்களை உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றி எல்லையில் உட்கார வைத்திருக்கின்றனர். இதனை வீரர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் எடுத்து பதிவிட்டிருக்கின்றனர்.

இதனைப் பற்றி நேதன் லைன் கூறியதாவது,

டோஸ்டர் முதலில் வெளியே வந்தவுடன் நான் எடுத்துபார்த்து விட்டு மீண்டும் அதனுள்ளலேயே வைத்துவிட்டேன். பின்னர் அதனை கவனிக்காமல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் போர் அடித்துவிட்டது. ஸ்மித்தும் தீ பற்றியவுடன் பார்த்து அதனை அனைக்க ஓடினார், பின்பு தான் தெரிந்தது தீ பற்றிவிட்டது என.

எனக் கூறினார் நேதன் லைன்.

Editor:

This website uses cookies.