தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது ஆகிய இரண்டு வீரர்களுக்கு பதில் பிசிசிஐ மாற்று வீரரை தேர்வு செய்துள்ளது
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டியில் இரண்டு அணிகளும் 1-1 என வெற்றி பெற்று சமநிலையில் இருப்பதால் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒரு தலைப் பட்சமாகவே இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு அணிகளுமே தீவிரமாக விளையாடி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது, இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி மட்டுமில்லாமல் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருந்த வாஷிங்டன் சுந்தர் கொரோனா தொற்று காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது,மேலும் இவரை தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் இதனால் இவரும் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த இரண்டு வீரர்களுக்கு பதில் இந்திய அணி எந்த மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் என்று பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணி அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளது.
அதில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்க்கு பதில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டதாகவும், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு பதில் இளம் வீரர் நவ்தீப் சைனி ஆகிய இரண்டு வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.