தந்தையின் சாதனையை பறித்த நயன் மோங்கியாவின் மகன்

ஒரு 25 வருடங்களுக்கு முன்பு கூச் பெஹர் டிராபியில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான பரோடா அணிக்காக மும்பை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து செய்தி தாள்களில் தலைப்பு செய்தியாக வந்தார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட்-கீப்பர் நயன் மோங்கியா. நவம்பர் 14ஆம் தேதி அன்று அவருடைய மகன் மோஹித் மோங்கியா அதே கூச் பெஹர் டிராபியில் கேரள அணிக்கு எதிராக 246 பந்தில் 240 ரன் அடித்து அசத்தினார்.

இதனால், கூச் பெஹர் டிராபியில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான பரோடா அணிக்காக அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் நயன் மோங்கியாவின் மகன் மோஹித் மோங்கியா. இதற்கு முன்பு 224 ரன் அடித்த நயன் மோங்கியா தான் அந்த சாதனையை வைத்து கொண்டு இருந்தார்.

U19 பரோடா அணியின் கேப்டன் மோஹித் மோங்கியா, கூச் பெஹர் டிராபியில் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான பரோடா அணிக்காக அதிக ரன் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். அவர் இன்னும் அவுட் ஆக வில்லை, இதனால் அவர் முச்சதம் அடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

“என் மகன் என் சாதனையை முறியடித்தார் என்பதை நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத உணர்வு. மோஹித் மோங்கியா சிறப்பாக விளையாடி வருகிறார், இதனால் இந்த இரட்டை சதம் அவருக்கு தகுதியானது,” என மோஹித் மோங்கியாவின் தந்தை நயன் மோங்கியா கூறினார்.

“என்னை மோஹித் அழைத்தார் மற்றும் அவரது இன்னிங்ஸ் பற்றி மிகவும் சந்தோச பட்டார். சொல்ல போனால், என்னுடைய சாதனையை முறியடித்தது கூட அவருக்கு தெரியாது. எனது மனைவி தான் மோஹித்திடம் கூறினார். என் மகன் மிகவும் சந்தோஷம் அடைந்தான். தன் மகன் அந்த சாதனையை வைத்து கொண்டிருப்பதால், என் மனைவி தாணு மிகவும் சதோசமாக இருக்கிறார்,” என நயன் மோங்கியா மேலும் கூறினார்.

மோஹித் மோங்கியா இரட்டை சதம் அடிக்க ஷிவாலிக் சர்மா மற்றும் உர்வில் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடிக்க ஆட்டநேர முடிவில் பரோடா அணி 409/7 ரன்னுடன் வலுவான நிலையில் உள்ளது. மேலும், கேப்டன் மோஹித் மோங்கியா அவுட் ஆகாமல் விளையாடி கொண்டிருக்கிறார்.

“நான் ஒரு இரட்டை சதத்தை அடித்ததால் திருப்தியுடன் இருக்கக்கூடாது என்று சொன்னேன். பல போட்டிகள் இருக்கின்றன, இதனால் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்,” என நயன் மோங்கியா தெரிவித்தார்.

உங்களுக்கும் உங்கள் மகனின் பேட்டிங்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று கேட்ட போது, அவர் அதிரடியாக விளையாடுவார் என்று நயன் மோங்கியா கூறினார்.

“அதிரடியாக விளையாடுவதற்கு அவருக்கு பிடிக்கும், எதிரணிகளை தொடக்கத்தில் இருந்தே துவம்சம் செய்வார். நான் பொறுமையாக விளையாடி தான், பிறகு தான் எனது ஆட்டத்தை வேகப்படுத்துவேன்,” என நயன் மோங்கியா கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.