ரோஹித் சர்மாவிற்கு இடம் இல்லை; இன்றைய போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

ரோஹித் சர்மாவிற்கு இடம் இல்லை; இன்றைய போட்டிக்கான இந்திய அணி இது தான் 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், இப்போது நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது

இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்கள் சிலருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளை பொறுத்தமட்டில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. அதேசமயம் தொடரை வாஸ் அவுட் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது.

கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ராகுல் சாஹர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோஹ்லி, மணிஷ் பாண்டே/ ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹமது.

Mohamed:

This website uses cookies.