அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்; அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சென்னை !!

அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்; அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சென்னை

காயம் காரணமாக சென்னை அணியின் கடைசி போட்டியில் விளையாடாத அம்பத்தி ராயூடு, அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை அசால்டாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த அம்பத்தி ராயூடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அடுத்த போட்டியில் விளையாடவில்லை. காயம் காரணமாக அம்பத்தி ராயூடு விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டது, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சென்னை அணி தோல்வியும் அடைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு மிடில் ஆர்டரில் சரியான பேட்ஸ்மேன் இல்லாதது காரணம், அடுத்த போட்டியில் அம்பத்தி ராயூடு வந்துவிட்டால் அந்த பிரச்சனையும் சரியாகிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என சென்னை அணியின் சி.இ.ஒ அறிவித்துள்ளார்.

நாளை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ராயுடு விளையாட வாய்ப்பில்லை என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளோர். இது குறித்து அவர் கூறும் போது “ அவரது உடல்நிலை குறித்து கவலையடைய ஒன்றுமில்லை. அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்து வரும் ஒரு போட்டியில் விளையாடமால் இருப்பார். ஆனால் சரியான நேரத்தில் அவர் ஆட்டத்தில் பங்கேற்க தயாராகவும் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.