ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய வெஸ்டிண்டீஸ் வீர ரஸ்செல் தடைகாலம் முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
உலக ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் விதிமுறையை பின்பற்றாததால் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காலம் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து அவர் வருகிற 4-ந் தேதி நடைபெறும் உள்ளூர் போட்டியில் ஜமைக்கா அணிக்காக களம் காணுகிறார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஸ்செல்லை அந்த அணி நிர்வாகம் இந்த சீசனில் ரூ.8½ கோடிக்கு தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19):
சுனில் நரேன்
அண்ட்ரே ரஸ்சல்
மிச்செல் ஸ்டார்க்
கிறிஸ் லைன்
தினேஷ் கார்த்திக்
ராபின் உத்தப்பா
பியுஸ் சாவ்லா
குல்தீப் யாதவ்
ஷுபம் கில்
இஷாங் ஜக்கி
கம்லேஷ் நகர்கொட்டி
நிதிஷ் ரானா
வினய் குமார்
அபூர்வ் வான்கடே
ரிங்கு சிங்
ஷிவம் மவி
கெமரான் டெல்போர்ட்
மிச்செல் ஜான்சன்