இந்தியாவை வீழ்த்த 270 ரன்கள் போதும்; வங்கதேச கேப்டன் வாய்ச்சவடால் !!

இந்தியாவை வீழ்த்த 270 ரன்கள் போதும்; வங்கதேச கேப்டன் வாய்ச்சவடால்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா – வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் மைதானத்தில் இந்தியா ஒரேயொரு முறைதான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த ஸ்கோரை ஹாங் காங் விரட்டியது. மற்ற போட்டிகளில் இந்தியா 2-வது பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றது. கடைசி போட்டி ‘டை’யில் முடிந்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக 260 முதல் 270 ரன்கள் அடித்தால் சிறந்த முறையில் நெருக்கடி அளிக்க முடியும் என வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் 260 முதல் 270 ர ன்கள் அடித்தால், அது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான ஸ்கோராக இருக்கும். எனினும், அது வெற்றிக்கான ரன்கள் என்னால் உறுதியாக கூற இயலாது. நாங்கள் முதலில் பந்து வீசினால், அவரைகள் குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.

இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் வங்காள தேசத்தின் அழகான போட்டியை கண்டேன். முஷ்பிகுர் ரஹிம், மிதுன் பேட்டிங்கிலும், மிராஜ் மற்றும் முஷ்டாபிஜுர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.