தேவையில்லாத வார்த்தைகள் பேசி மாட்டிக்கொண்ட விஜய் சங்கர், போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

தேவையில்லாத வார்த்தைகள் பேசி மாட்டிக்கொண்ட விஜய் சங்கர், போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விஜய் சங்கர் 2019 ஆம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணிக்காக வெகுவாக புறக்கணிக்கப் படுகிறார். அவன் நன்றாக விளையாடதன் காரணமே அவர் புறக்கணிக்கப்பட காரணமாக அமைந்தது. இருப்பினும் மீண்டும் தன் திறமையை காண்பித்து இந்திய அணிக்குள் நுழைவேன் என்று முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.

ஆனாலும் தன் திறமையை காண்பிக்க தவறிய விஜய் சங்கர் தற்பொழுது சமூகவலைதளத்தில் ஒரு பகிரங்க பதிவை கூறி அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கடைசியில் விஜய் சங்கர் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரும் கலாய்த்த வண்ணம் இருக்கின்றனர்.

ஜாக் காலிஸ் மற்றும் ஷேன் வாட்சன் உடன் தன்னை ஒப்பிட்டு பேசிய விஜய் சங்கர்

சமீபத்தில் விஜய் சங்கர் தான் சரியாக விளையாடாமல் போனதற்கான காரணம் தன்னை சரியாக பேட்டிங் வரிசையில் இறக்கி விடாததே என்று கூறியுள்ளார் . தானொரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்றும் தன்னை கடைசியாக இறக்கி விடுவது சரியல்ல என்று கூறியுள்ளார். தான் விளையாடும் அனைத்து அணிகளிலும் தன்னை நம்பர் 3 அல்லது நம்பர் 4 இடத்தில் இறக்கி விட்டால் தன்னால் சரியாக பெர்பாம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு ஆல்ரவுண்டர் எப்படி டாப் ஆர்டரில் விளையாடுவது என்று யோசித்து இருந்தால் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு ஜாக்ஸ் காலிஸ் கிடைத்திருக்க மாட்டார். அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஷேன் வாட்சன் கிடைத்திருக்க மாட்டார். எனவே தானும் அவர்களைப்போல விளையாடும் ஆற்றல் உள்ளவர் என்றும் தன்னை இனி வரும் ஆட்டங்களில் நம்பர் 3 அல்லது 4இல் விளையாட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபகாலமாக விஜய் சங்கரின் பெர்பாமன்ஸ்

2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களில் விஜய் சங்கர் 7 போட்டிகளில் விளையாடி 97 ரன்கள் குவித்து இருந்தார். அதேபோல இந்த ஆண்டு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 58 ரன்கள் குவித்துள்ளார். தமிழ்நாடு அணிக்காக இரஞ்சி டிராபி தொடரில் கடைசியாக இரண்டு போட்டிகளில் விளையாடி 69 ரன்கள் குவித்துள்ளார். இப்படி சமீப காலத்தில் மிக மோசமாக விளையாடி வரும் விஜய் சங்கர் தன்னை தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களுடன் இணைந்து பேசியது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

ஒரு ஆல்ரவுண்டர் வீரர் எப்படி மேல் வரிசையில் விளையாட முடியும் என்றும், இவர் சரியாக விளையாடாமல் தற்பொழுது தான் விளையாடிய அணி நிர்வாகங்களை குறை கூறி வருகிறார் என்றும் சமூக வலைதளங்களில் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அவரைப்பற்றிய மீம்ஸ் அதிக அளவில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் அதிர்ச்சி செய்தியாக விஜய் சங்கர் தமிழ்நாடு அணியிலிருந்து வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.