தென் ஆப்பிரிக்க அணிக்கு 3 விதமான போட்டிகளுக்கும் புதிய கேப்டன் நியமனம் !
தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஐந்து வருடங்களாக படு மோசமாக விளையாடி வருகிறது. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் செமி பைனல் போட்டியில் வெளியேறியது. அப்போது அந்த அணிக்கு ஏபி டிவிலியர்ஸ் கேப்டனாக இருந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக உடனடியாக தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேறினார்.
அதன்பின் பாப் டு பிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரும் ஓரளவிற்கே தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் திடீரென ஏபி டிவில்லியர்ஸ் தனது 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு வெளியேறிவிட்டார். இதன் காரணமாக அந்த இடம் தற்போது வரை நிரப்பப்படாமல் இருக்கிறது.
இதனை தொடர்ந்து டு பிளசிஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க அணி படு மோசமாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துக்குமான போட்டிகளிலும் தோல்வி அடைந்து கொண்டு இருந்தது. கடந்த வருடம் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக இருந்தார். இவருக்கு 26 வயதாகிறது டெஸ்ட் போட்டிகளை பாப் டு பிளசிஸ் கேப்டனாக கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென குவின்டன் டி காக் அனைத்து தொடர்களுக்கும் ஒரே கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டிசம்பர் 26-ம் தேதியும் 2வது டெஸ்ட் போட்டியில் ஜனவரி 3ஆம் தேதியும் தொடங்க போகிறது. இதற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை வைத்துதான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருப்பார் என்று அந்த கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.